ஓட்டல் தொழிலை ஊதித் தள்ளிய கொரோனா!! 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இழப்பு!

ரோசியாட் ஓட்டல் மற்றும் ரிசார்ட்டுகளை வைத்திருக்கும் பேர்டு குழுமத்தின் தலைவர் அன்கூர் பாட்டியா கூறுகையில், ‘நாங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவில் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஓட்டல் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது’  என்றார்.

ஓட்டல் தொழிலை ஊதித் தள்ளிய கொரோனா!! 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இழப்பு!

கொரோனாவால் ஓட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு நீங்குவதற்கு, இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று வல்லுனர்க்ள கணித்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்
  • பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழில் பாதிப்பு
  • 10 ஆண்டுகளில் இல்லாத அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் அதிபர்கள் வேதனை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஓட்டல் தொழில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளதாக தொழில் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரைக்கும் ஓட்டலில் வேலையிழப்பு குறித்து முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. நிலைமை எப்போது சீரடையும் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. சில ஓட்டல் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை செய்துள்ளனர்.

ரோசியாட் ஓட்டல் மற்றும் ரிசார்ட்டுகளை வைத்திருக்கும் பேர்டு குழுமத்தின் தலைவர் அன்கூர் பாட்டியா கூறுகையில், ‘நாங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவில் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஓட்டல் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது'  என்றார்.

NDTVக்கு கிடைத்த தகவல்கள் படி, பல ஓட்டல்களில் ஒற்றை இலக்க அளவில்தான் அறைகள் புக் செய்யப்பட்டிருக்கின்றன. அத்தனைக்கும் கொரோனா பரவல்தான் காரணம்.

கோன்ராட் பெங்களூரு ஓட்டல் பொது மேலாளர் ஸ்ரீஜன் வதேரா கூறுகையில், ‘பெரும்பாலான பயண மற்றும் ஓட்டல் நிறுவனங்கள் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது நெருக்கடிகளை சந்திக்கின்றன' என்று தெரிவித்தார்.

ராயல் ஆர்க்கிட் பெங்களூருவின் சந்தர் பல்ஜி கூறும்போது, ‘பிரச்னை நீடித்துக் கொண்டே போகிறது. மின் கட்டணம் செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். இன்னும் பல சிக்கல்கள் உள்ளன.' என்றார்.

கொரோனாவால் ஓட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு நீங்குவதற்கு, இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று வல்லுனர்க்ள கணித்துள்ளனர்.