வருமான வரித்தாக்கல் செய்வதற்கான திருத்தப்பட்ட படிவத்தை வெளியிடுகிறது மத்திய அரசு!!

தாமதமாக வருமான வரிச் செலுத்தினால் அதற்கு 12 சதவீதம் வரை வட்டி அபராதமாக விதிக்கப்படும். இதனை மத்திய அரசு 9 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது.

வருமான வரித்தாக்கல் செய்வதற்கான திருத்தப்பட்ட படிவத்தை வெளியிடுகிறது மத்திய அரசு!!

பான் - ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பையொட்டி மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வகையில், 2019 - 20ம் ஆண்டுக்கான வருமான வரித்தாக்கலுக்கான படிவத்தை, மத்திய நேரடி வரிகள் வாரியம் திருத்தி வெளியிடுகிறது. இந்த புதிய படிவம் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தொழில்கள் கடுமையாக முடங்கியுள்ளன. பெரிய நிறுவனங்கள் முதல் சிறு குறு நிறுவனங்கள் வரையில் வரலாறு காணாத இழப்பை சந்தித்து வருகின்றன.

இதனால் தொழில்துறையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சலுகைகளை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நாட்டின் தொழில்துறையை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி, வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31-ம்தேதியில் இருந்த ஜூன் 30-ம்தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 