நிதி அமைச்சரின் கொரோனா வைரஸ் நிவாரண தொகுப்பின் முக்கிய அம்சங்கள்

நாடு முழுக்க முடக்க உத்தரவு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அத்திவசமற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்பபட்து. இதன் காரணமாக உருவான நிதி சிக்கல்களைச் சமாளிக்க ஏழை மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளார்.

The relief measures included direct cash transfers and food security-related steps

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று பரவல் மேலெழுந்ததைத் தொடர்ந்து, நாடு முழுக்க முடக்க உத்தரவு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அத்திவசமற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்பபட்து. இதன் காரணமாக உருவான நிதி சிக்கல்களைச் சமாளிக்க ஏழை மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரண தொகுப்பினை அறிவித்த நிதியமைச்சர், "யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள்" என்று கூறி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் கஷ்டங்களை தணிப்பதில் அரசு உடனடி கவனம் செலுத்துவதாகவும் கூறினார். நிதியமைச்சர் அறிவித்த அறிவிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் இருப்பவர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ .50 லட்சம் மருத்துவ காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • ஓய்வூதியம் பெறுவோர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட எட்டு பிரிவுகளுக்கு நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும்.
  • ஏப்ரல் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ .2,000 பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் வழங்கப்படும். இது ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமாகும்.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியம் ரூ .182 லிருந்து ரூ .202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு ரூ .500 தொகை அடுத்த மூன்று மாதங்களுக்குக் கிடைக்கும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. 
  • ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்குக் கூடுதலாக ரூ .5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாகக் கிடைக்கும். கூடுதலாக, வீட்டுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு 1 கிலோ பருப்பு இலவசமாக கிடைக்கும்.
  • தீன் தயால் உபாத்யாயா கிராமப்புற மிஷன் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கான கடன் தொகையானது இரட்டிப்பாக்கப்பட்டு ரூ .20 லட்சமாக வழங்கப்பட்டுள்ளது.
  • அமைப்பு சார்ந்த துறையைப் பொருத்தவரை, 100 ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்களில் மாதத்திற்கு ரூ .15,000 க்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கான பி.எஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும்.
  • மேலும், அமைப்பு சார்ந்த துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது ஈபிஎஃப் கணக்கிலிருந்து 75 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அல்லது மூன்று மாத ஊதியம் திரும்பப் பெறவும் அரசு அனுமதித்திருக்கின்றது. இதனால் 4.8 கோடி சந்தாதாரர்களுக்குப் பயன் பெருவார்கள் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Listen to the latest songs, only on JioSaavn.com