சென்னை பக்கம் திரும்பியுள்ள கன்டெய்னர் வீடுகள்: தெரிந்துகொள்ள வேண்டியவை

100 சதுர அடியில் இருந்து 2000 சதுர ஆதி வரை உங்கள் இடத்திற்கு ஏற்றவாறு கட்டிக்கொள்ளலாம். 6-8 கண்டெய்னர்கள் வைத்து  அடுக்குமாடி வீடுகளை கூட கட்டலாம்

சென்னை பக்கம்  திரும்பியுள்ள கன்டெய்னர் வீடுகள்: தெரிந்துகொள்ள வேண்டியவை

ஹைலைட்ஸ்

  • 6-8 கண்டெய்னர்கள் வைத்து  அடுக்குமாடி வீடுகளை கூட கட்டலாம்
  • கண்டெய்னர் வீடுகள் தற்போதைய போக்குக்கு ஏற்றவாறு மாடர்னாக கட்டப்படுகிறது
  • குறைந்த செலவு மற்றும் குறைந்த நாட்களில் உங்கள் சொந்த வீடு
 மேற்கத்திய நாடுகளில் டிரெண்டில் இருக்கும் கண்டெய்னர் ஹோம் இப்பொழுது நம் பக்கம்  திரும்பியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போலவே ஸ்டீல் கப்பலல் கண்டெய்னரில் கட்டப்படும் வீடுகள். கண்டெய்னர் என்றவுடன் மிக சிறியதாக வசதிகள் இல்லாத வீடு என்ற எண்ணம் தான் நம்மில் பலருக்கு வரும். ஆனால் மிக வசதியாக சிறப்பான வீடுகளை கண்டெய்னரில் கட்டலாம்.

"மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த கண்டெய்னர்  வீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது, முதல் கண்டெய்னர் வில்லாவை சென்னை இசிஆர்-ல் கட்டியுள்ளோம்" என்கிறார் ரெக்டாங்குளர் கன்ஸ்டரக்சன் நிறுவனர் ஷரவன் 


கண்டெய்னர் ஹோமின் நன்மைகள் 

பெரும்பாலும் கண்டெய்னர் வீடுகள் தற்போதைய போக்குக்கு ஏற்றவாறு மாடர்னாக கட்டப்படுகிறது, அதிலும் குறைந்த செலவு மற்றும் குறைந்த நாட்களில் உங்கள் சொந்த வீடு உங்கள் கைவசம் இருக்கும். 

100 சதுர அடியில் இருந்து 2000 சதுர ஆதி வரை உங்கள் இடத்திற்கு ஏற்றவாறு கட்டிக்கொள்ளலாம். 6-8 கண்டெய்னர்கள் வைத்து  அடுக்குமாடி வீடுகளை கூட கட்டலாம். 

"சென்னை பொறுத்தவரை நிலத்தின் விலை ஏறிக்கொண்டே போகும் ஆனால் கட்டிடத்தின் மதிப்பு  குறையும், அதனால் சென்னைக்கு கண்டெய்னர் வீடுகள் மிகவும் பொருந்தும்" என்கிறார் ஷரவன். 

நிலத்தை  விற்று நீங்கள் இடம் மாற வேண்டும் என்றால் உங்கள் வீட்டையும் உங்களுடன் எடுத்து செல்லலாம். இதுவே கண்டெய்னர் வீடுகளின் சிறப்பமசமாகும். 

மேலும் பயன்படுத்திய கன்டெய்னர்களை மறுசுழற்சி செய்வதால் சூற்றுசூலுக்கு ஏற்றதாக அமையும்.

ஆனால் நம் ஊரின் வெப்ப நிலைக்கு ஏற்றதாக அமையுமா என்றால், இல்லை. அது மட்டுமே ஒரு பின்னடைவாக இருக்கிறது.

அடுத்து நீங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் கண்டெய்னர் வீடுகளை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் பட்ஜட்டில் மாடுலர் வீடு தயார்!