வருமான வரி தாக்கல் செய்யும் போது, நீங்கள் கவனித்தில் கொள்ள வேண்டியவை

தனி நபர் வருமான வரி (2017-2018 நிதிஆண்டு) தாக்கல் செய்ய ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி தான் கடைசி நாள்

வருமான வரி தாக்கல் செய்யும் போது, நீங்கள் கவனித்தில் கொள்ள வேண்டியவை

தனி நபர் வருமான வரி (2017-2018 நிதிஆண்டு) தாக்கல் செய்ய ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி தான் கடைசி நாள். எந்த அபராதமும் செலுத்தக் கூடாது என்றால், 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்வது நல்லது. ஒரு நாள் தாமதமானால் 5000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். மேலும், நாட்கள் அதிகரிக்க அபராதமும் உயரும்.

தனி நபர் வருமான வரி தாக்கல் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. கடைசி நாளுக்குள் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது?

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், 1% வட்டி வசூலிக்கப்படும். 5000 ரூபாயில் இருந்து அபராதம் தொடங்கும். 3 அடுக்கு அபராதம் வசூலிக்கும் முறையை வருமான வரித்துறை உருவாகியுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்து விட்டால் 5000 ரூபாய் அபராதம் பொருந்தும். அதற்கு மேல் நேரம் எடுத்துக் கொண்டால், 10,000 ரூபாய். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்தினால் போதும்.

2. வருமான வரி தாக்கலுக்கு எந்த படிவத்தை நிரப்ப வேண்டும்?

வருமான வரித்துறை 7 படிவங்களை ஆன்லைன் மூலம் வருமான வரி விவரம் தாக்கல் செய்ய வைத்திருக்கிறது. ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 and ITR 7. ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை இ-ஃபைலிங் என்று கூறப்படுகிறது.

3. வருமான வரி வரம்புகள் என்னென்ன?

2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் 5% வருமான வரி செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களின் வருமான அளவு 3 லட்சம் ரூபாய் வரையும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் வருமானம் இருந்தால் எந்த வரியும் இல்லை.

income tax slabs 2017 18

4. வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் மாற்றம் செய்ய முடியுமா?

ஒரு முறை வருமான வரி தாக்கல் செய்தால், பின் மாற்றம் செய்ய மார்ச் 2019 வரை அவகாசம் தரப்படுகிறது. முன் இதற்கு இரண்டு ஆண்டு அவகாசம் தரப்பட்டது.

5. வருமான வரி விவரம் தாக்கலை எப்படி உறுதி செய்வது?

வருமான வரி தாக்கல் செய்த பிறகு, உறுதி செய்வதை கட்டாயமாக வைத்திருக்கிறது வருமான வரித்துறை. மின்னஞ்சல், நெட் பேங்கிங், ஆதார் எண் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com