ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாந்தா கொச்சார் ராஜினாமா

Chanda Kochhar Resigns: சாந்தா கொச்சாருக்கு பதிலாக ஐ.சி.ஐ.சி.ஐ.-யின் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு சந்தீப் பக்ஷி (Sandeep Bakhshi) நியமிக்கப்பட்டுள்ளார்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாந்தா கொச்சார் ராஜினாமா

Chanda Kochhar Quits: சாந்தா கொச்சாரின் ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வந்தது

ஐ.சி.ஐ.சி.ஐ.-யின் தலைமை செயல் அதிகாரியாக (ICICI Bank CEO) இருந்த சாந்த கொச்சார் குறித்து சமீபத்தில் பல்வேறு சர்ச்கைகள் வெடித்தன. அவரது கணவர், வீடியோகான் குழுமத்துடன் இணைந்து தொழில் புரிந்துள்ளார். அதனால் வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் சாந்தா கொச்சார் ஆதரவாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அன்றாட செய்திகளாகவும் வலம் வந்தன. இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாந்தா கொச்சார் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தை இயக்குனர் குழுமம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சாந்தா கொச்சாருக்கு (Chanda Kochhar) பதிலாக ஐ.சி.ஐ.சி.ஐ.-யின் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு சந்தீப் பக்ஷி (Sandeep Bakhshi) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பொறுப்பில் வரும் 2013, அக்டோபர் 3-ம் தேதி வரை நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News