Profit

‘ரூபாய் வீழ்ச்சிக்கு உடனடி நடவடிக்கைத் தேவை!’- ஆர்பிஐ-க்கு அரசு வலியுறுத்தல் என தகவல்

ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த ஆர்பிஐ, ஜூன் மாதம் 6.18 பில்லியன் டாலர்களையும், மே மாதம் 5.8 பில்லியன் டாலர்களையும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

1Share
EMAIL
PRINT
COMMENTS
‘ரூபாய் வீழ்ச்சிக்கு உடனடி நடவடிக்கைத் தேவை!’- ஆர்பிஐ-க்கு அரசு வலியுறுத்தல் என தகவல்

ஹைலைட்ஸ்

  1. என்ஆர்ஐ-களுக்கான முதலீட்டு திட்டம் குறித்து விவாதிகப்பட்டுள்ளது
  2. இந்த மாதம் முழுவதும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்துள்ளது
  3. ரூபாய் வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும்

கடந்த ஒரு மாதமாக தொடர் வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய் மதிப்பை சரிகட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. 

ரூபாய் மதிப்பை உயர்த்துவது குறித்து சென்ற வாரம் அரசு தரப்பு, ஆர்பிஐ அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு அதிக திட்டங்களை கொண்டு வருவது குறித்தும் எடுத்துக் கூறியுள்ளது. 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 11.6 சதவிகிதம் சரிந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இது தான் மிகவும் மோசமான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தான் நேற்று மத்திய அரசு அதிகாரி ஒருவர், ‘நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் தொடர்பில் தான் இருக்கிறது. தேவைப்படும் போது தலையிட்டு இந்த விஷயத்தில் தீர்வு காண்போம்’ என்று கூறினார். 

குறிப்பாக இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வந்தது. கச்சா எண்ணெய் விலையேற்றமே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது. 

ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த ஆர்பிஐ, ஜூன் மாதம் 6.18 பில்லியன் டாலர்களையும், மே மாதம் 5.8 பில்லியன் டாலர்களையும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top