Profit

புது வீடு வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல செய்தி

நடுத்தர குடும்பங்கள் முதல் முறை வாங்க நினைக்கும் வீட்டுக்கு மத்திய அரசின் சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் மானியம் பெற, வீடு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
புது வீடு வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல செய்தி

The government has widened the scope of eligibility for claiming subsidy under CLSS in the category

ஹைலைட்ஸ்

  1. கார்ப்பெட் ஏரியா 33% அதிகரிப்பு
  2. 4% வரை கடன் வட்டி தள்ளுபடி
  3. மானியம், கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும்
நடுத்தர குடும்பங்கள் முதல் முறை வாங்க நினைக்கும் வீட்டுக்கு மத்திய அரசின் சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் மானியம் பெற, வீடு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். அதில் மாற்றம் செய்து அறிவித்துள்ளது வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் நடுத்தர குடும்பங்கள் (I & II) வாங்க இருக்கும் வீட்டுக்கான கார்ப்பெட் ஏரியாவை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த விலை வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது. மேலும் நடுத்தர வர்கத்தினர் பலரும் வீடு வாங்க மானியம் பெறவும் முடியும்.

இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள 10 விஷயங்கள் :

1. நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் தகவலின் படி, கார்ப்பெட் பகுதி நடுத்தர குடும்பம்-1( MIG-I) 160 சதுர மீட்டராகவும், நடுத்தர குடும்பம் -2 (MIG-II) 200 சதுர மீட்டராகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கார்ப்பெட் ஏரியா என்பது, வீட்டுச் சுவரின் அளவை கழித்தது போக, வீடு இருக்கும் அளவு என்று குறிக்கப்படுகிறது.

2. நடுத்தர குழு குடும்பங்களுக்கு, கார்ப்பெட் ஏரியா அளவு 33 % அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, 120 மற்றும் 150 சதுர மீட்டர்களாக MIG-I மற்றும் MIG-II பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

3. "இந்த உயர்வு கட்டுமான தொழிலிலை ஊக்குவிக்கும் முயற்சியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தர வர்கத்தினர் வீடு வாங்கவும் இது ஊக்கமாக இருக்கும்" என அமைச்சகம் தெரிவித்துள்ளது

4. 6 முதல் 12 லட்சம் வருட வருமானம் பெறும் குடும்பம் MIG-I பிரிவிலும், 12 முதல் 18 லட்சம் வருட வருமானம் பெறும் குடும்பம MIG-II பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன.

5. MIG-I வர்கத்திற்கு, கடன் வசதி 9 லட்சமாகவும், மானிய 2,35,068 ரூபாயாகவும், 4% வட்டி தள்ளுபடியும் உள்ளது. MIG-II வர்கத்திற்கு, கடன் வசதி 12 லட்சமாகவும், மானியத்திற்கான முன் பணம் 2,30,156 ரூபாயாக உள்ளது. 3% வட்டி தள்ளுபடியும் உள்ளது

ParticularsCLSS for MIG
MIG – IMIG - II
Household Income (Rs. p.a.)From 6,00,001 up to 12,00,000From 12,00,001 up to 18,00,000
Interest Subsidy (% p.a.)4.00%3.00%
Maximum Loan Tenure2020
Eligible Housing Loan Amount for Interest for Interest Subsidy (Rs)9,00,000/-*12,00,000/-*
Dwelling Unit Carpet Area (up to)**160 sq.m.200 sq.m.
Discounted Rate for Net Present Value (NPV) calculation for interest subsidy9.00%9.00%
Upfront Amount for Subsidy (Rs.)2,35,068/-2,30,156/-

6. இந்த கொள்கை மாற்றம் இந்திய ரிசர்வ் வங்கியின் விதி வரையறைக்குள் இருக்கிறது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

7. கடந்த வாரம் மத்திய வங்கி, வீட்டு கடன் வழங்கும் அளவை, மெட்ரோ நகரங்களில் 28 லட்சத்திலிருந்து 35 லட்சமாகவும், மற்ற நகரங்களுக்கு 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாகவும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

8. பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கார்ப்பெட் ஏரியா அதிகரிப்பு, கட்டுமான நடவடிக்கைகளையும் மேம்படுத்தும்.

clss beneficiaries   official statement

9. கடங்த ஆறு மாதத்தில், இந்த மனைய திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜூன் 11 -ம் தேதியின் படி, 736.79 கோடி ரூபாய் 35,204 பயனாளிகளுக்கு MIG பிரிவில் வழங்கப்பட்டதாகவும், 133,213 பயனாளிகளுக்கு 2,890.50 கோடி ரூபாய் குறைந்த வருவாய் பிரிவினருக்கு வழங்கப்பட்டதாகவும் அறிக்கை வெளியானது.

10. 2022 ஆம் ஆண்டிற்குள், அரசு பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும், குறைந்த பட்ஜெட் வீடு வழங்க கொள்கை வகுத்துள்ளது.


வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top