
11 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலனளிக்கும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம், இந்த ஆண்டு போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும். இதன் மூலம் 11,00,000 ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள்.
இதன் மூலம் அரசுக்கு 2,024 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும் ஆறாவது ஆண்டாக இது இருக்கும் என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.