புதிய கார் மற்றும் பைக்குகளுக்கு மூன்றாம் நபர் காப்பீடு நாளை முதல் கட்டாயமாகிறது

2018, செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது

புதிய கார் மற்றும் பைக்குகளுக்கு மூன்றாம் நபர் காப்பீடு நாளை முதல் கட்டாயமாகிறது

நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் கார் மற்றும் பைக் வாங்க ஆகும் செலவு அதிகரிக்க இருக்கிறது. நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது ஐ.ஆர்.டி.ஏ. உச்ச நீதிமன்றத்தின் ஆணைய ஏற்று இந்த விதி நடைமுறைக்கு வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கான மூன்றம் நபர் காப்பீட்டின் விலை 1000 சி.சிக்கு குறைவான கார்களுக்கு 5,286 ரூபாய். 1000 - 1500சி.சி வரையிலான கார்களுக்கு 9,534 ரூபாய். 1500 சி.சிக்கு மேல் உள்ள கார்களுக்கு 24,305 ரூபாய்க்கு காப்பீடு எடுக்க வேண்டும். மோட்டர் வாகன சட்டத்தின் படி இந்த மூன்றாம் நபர் கப்பீடு எடுப்பது கட்டாயம்.

நீதிமன்ற உத்தரவுப் படி புதிய கார்களுக்கு 3 ஆண்டு கால மூன்றாம் நபர் காப்பீடும், புதிய பைக்குகளுக்கு 5 ஆண்டு கால மூன்றாம் நபர் காப்பீடும் எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

Newsbeep

2018, செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது. இந்த விதி குறித்து காப்பீடு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, ஐ.ஆர்.டி.ஏ. அதன் படி கார்களுக்கு 3 ஆண்டுகளும், பைக்குகளுக்கு 5 ஆண்டுகளுக்குமான மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)