பட்ஜெட் 2019: ஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத்து துறையில் அந்நிய முதலீடு

விமான போக்குவரத்து, ஊடகங்கள், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (ஏவிஜிசி ) காப்பீடு, ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்தப் பரிசீலித்து வருகிறோம்.

பட்ஜெட் 2019: ஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத்து துறையில் அந்நிய முதலீடு

ஊடகத்துறையில் நாளேடுகள், வார ஏடுகள் உள்ளிட்டவைகளுக்கு 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும் (Representational)

New Delhi:

பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான  முயற்சியில் விமான போக்குவரத்து காப்பீடு மற்றும் ஊடகங்கள் ஆகிய முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டில் விதிமுறைகளை தளர்த்த அரசாங்கம் தயாராக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சுட்டிக் காட்டினார்.

 இந்தியாவை மேலும் கவர்ச்சிகரமான அன்னிய நேரடி முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான ஆதாயங்களை மேலும் ஒருங்கிணைக்க பரிந்துரைந்துள்ளார். விமான போக்குவரத்து, ஊடகங்கள், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (ஏவிஜிசி ) காப்பீடு, ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்தப் பரிசீலித்து வருகிறோம்.

 ஊடகத்துறையில் நாளேடுகள், வார ஏடுகள் உள்ளிட்டவைகளுக்கு 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும். அரசின் அனுமதியுட்ன செய்திகள், நடப்பு விவகாரங்களை பிரசுரிக்கலாம்.

 வெளிநாட்டு ஏடுகளின் இந்திய பதிப்புகளும் தொடங்க அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு அவசியமான ஒன்று துறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வெளிநாடு முதலீடு அவசியம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.