சிவப்பு நிற துணியில் கொண்டுவரப்பட்ட பட்ஜெட் : வரலாறை அறிந்து கொள்வோம்

Budget 2019:முதன்மை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இதுதான் இந்திய கலாசாரம்… ஆங்கிலேய மோகத்திலிருந்து நாம் வெளியேறி விட்டோம் என்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டு பேசியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட் செய்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிவப்பு நிற துணியில் கொண்டுவரப்பட்ட பட்ஜெட் : வரலாறை அறிந்து கொள்வோம்

மத்திய பட்ஜெட் 2019 இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் வழங்கப்படும்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார். முதன்மை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இதுதான் இந்திய கலாசாரம்… ஆங்கிலேய மோகத்திலிருந்து நாம் வெளியேறி விட்டோம் என்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டு பேசியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட் செய்துள்ளது. 

தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள் 

1. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அனுராக் தாக்கூர், நிதி செயலாளர் எஸ்சி கார்க், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிற அதிகாரிகளும் அமைச்சருடன் நிதி அமைச்சகத்திலிருந்து வெளியே வந்தனர். 

2. மத்திய பட்ஜெட் 2019 இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் வழங்கப்படும். 

3. இந்த பட்ஜெட் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைப் பெற்றூ ஆட்சிக்கு வந்தபின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். 

4. இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஐந்தாண்டு சரிவில் இருந்து மீட்க 2019 ஆண்டு பட்ஜெட்டில் வழி வகைகள்  செய்வார் என எதிர்பார்க்கின்றனர். 

5. பல  ஆண்ட்டுகளாக நிதியமைச்சர் பட்ஜெட்ட அறிவிக்க ஒரு பெட்டியை கொண்டு செல்வார்.அதில் அச்சிடப்பட்ட பட்ஜெட் உரை இருக்கும். 

6. சுதந்திர இந்தியாவின் முதல் யூனியன் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று ஆர்.கே. சண்முகம் செட்டி அவர்கள் லெதர் பையில் எடுத்துச் சென்றார். 

7. ஜவஹர்லால் நேரு 1958- இல் பட்ஜெட் வழங்க கருப்பு நிற சூட்கேஸை எடுத்துச் சென்றார். 

8. 1991 இல் மன்மோகன் சிங ஒரு கருப்பு பையை எடுத்துச் சென்றார். 

9. நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த காலத்தில் பழுப்பு நிற சூட்கேஸில் கொண்டு வந்தார். 

10. பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டினை சிவப்பு நிற பெட்டியில் எடுத்துச் சென்றார். Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top