
ரயில்வே கட்டண உயர்வு ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இன்று உள்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். நிதியமைச்சர் பியுஷ் கோயல் ரயில்வேக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தேசிய போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டதிலே மிக அதிகமான ஒதுக்கீடாகும். 2018-2019ல் ரயில்வே அமைச்சராகவும் இருந்து வருகிறார் பியூஷ் கோயல், பாதுகாப்பான இந்திய ரயில்வேயில் ஆளில்லா லெவக் கிராஸிங் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன் என்று கூறினார். அடுத்த நிதியாண்டில் 1.58 லட்சம் கோடி முதலீட்டில் ரயில்வேயின் மூலதன செலவுத் திட்டமாக உலகத் தரம் வாய்ந்த பயணத்தை வழங்குவதற்காகவே வெண்டே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற வகையில் செமி -ஹை ஸ்பீடு ரயில்களை உருவாக்க உள்ளது.
எங்கள் பொறியாளர்களின் வளர்ச்சியடைந்த தொழில் நுட்பத்தில் மிகப்பெரும் பாய்ச்சலாக இது இருக்கும். மேட் இன் இந்தியா திட்டத்தால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் செயல்பாட்டு விகிதம் 96.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் 95 சதவீதமாக இருக்கும் என்று கோயல் அறிவித்தார். ரயில்வே பட்ஜெட்டில் 2019 ஆண்டுக்கான ரயில்வே கட்டண உயர்வு ஏதும் அறிவிக்கப்படவில்லை. திட்டமிடப்பட்ட செலவீனங்கள் 2014 ஆம் ஆண்டில் அளவுகள் 148 சதவீதம் அதிகரித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)