நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும்: நிர்மலா சீதாராமன்

இந்தியாவை 2.7 டிரில்லியன் டாலரிலிருந்து, 2024/2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்க்கும் இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும்: நிர்மலா சீதாராமன்

2வது முறையாக மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் மோடி அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அந்தவகையில், இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில், மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.  

மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

அதில், கடந்த 5 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை எளிய மக்கள் பயன் பெற்றுள்ளனர். 

தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.7 லட்சம் டிரில்லியன் டாலராக உள்ளது. நடப்பாண்டில் இது 3 டிரில்லியன் டாலராக உயரும். விரைவில் 5 டில்லியன் டாலர் இலக்கை எட்டுவோம். 

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலக பொருளாதார வளர்ச்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது. தற்போது 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய 55 ஆண்டுகளுக்கு மேலாகியது. ஆனால் இதயங்களின் நம்பிக்கையால், வெறும் 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களைச் அடைந்துள்ளோம். 

இந்தியாவை 2.7 டிரில்லியன் டாலரிலிருந்து, 2024/2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்க்கும் இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்ததை விட மிக மெதுவாக 5.8 சதவீதமாக வளர்ந்தது, இது ஐந்து ஆண்டுகளில் பலவீனமான வளர்ச்சியாகும்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top