பட்ஜெட் 2019: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 வார்த்தைகள்

Budget 2019: பட்ஜெட் அறிவிப்பின் போது பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகளை தெரிந்து கொள்ளுங்கள் அப்போதுதான் பட்ஜெட்டின் அம்சங்களை புரிந்து கொள்ளமுடியும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பட்ஜெட் 2019: நீங்கள் தெரிந்து  கொள்ள வேண்டிய முக்கியமான 10  வார்த்தைகள்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ஜூலை 5 தாக்கல் செய்யப்படவுள்ளது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 5 அன்று தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொருளாதார வல்லுநர்கள், வரி ஆய்வாளர்கள், பொது மக்கள் என அனைவரின் கவனமும் பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்புகள் வெளியாகும் என்பதிலேயே உள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தும் உள்ள நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

 பட்ஜெட் அறிவிப்பின் போது பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகளை தெரிந்து கொள்ளுங்கள் அப்போதுதான் பட்ஜெட்டின் அம்சங்களை புரிந்து கொள்ளமுடியும்.

1.பட்ஜெட் ஆவணங்கள்: பட்ஜெட்டின் ஒரு பகுதியாக பாராளுமன்றத்தில் தாக்கல் செயய்ப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாகும். இதில் பட்ஜெட் பேச்சுவார்த்தை, வருடாந்திர நிதிநிலை அறிக்கை, மானியங்களுக்கான கோரிக்கைகள், பொருளாதார கட்டமைப்பு மற்றும் நிதிக் கொள்கை, வியூக அறிக்கைகள், செலவுக்கான பட்ஜெட், ரசீதுகள் பட்ஜெட் மற்றும் செலவு விவரங்கள் ஆகியவை அடங்கும்.

 2. பட்ஜெட் உரை : இது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரை. 

3. நேரடி மற்றும் மறைமுக வரிகள்: நேரடி வரி என்பது தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளாகும். உதாரணமாக வருமான வரி, கார்ப்ரேட் வரி போன்றவை. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மறைமுக வரி விதிக்கப்படுகிறது. நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போதோ அல்லது சேவைகள் பெறும் போதோ பணம் செலுத்துகிறார்கள். சுங்க வரி, ஜிஎஸ்டி ஆகியவைற்றை மறைமுக வரியாக சொல்லலாம். 

4. நிதிப் பற்றாக்குறை: இது ஒரு வருடத்தில் அரசாங்க செலவீனங்கள் அரசாங்கத்தின் வருவாயை விட அதிகமாகும் போது ஏற்படக் கூடியது. பற்றாக்குறையை பூர்த்தி செய்ய அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து கடன் பெறுகிறது.

  5. பட்ஜெட் மதிப்பீடுகள் : நிதியாண்டிற்கு ஒவ்வொரு துறை அமைச்சகம் மற்றூம் திட்டத்திற்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணம். 

6. நிதி மசோதா: பட்ஜெட் தாக்கல் செய்த பின். முன் மொழியப்பட்ட வரிகள், வரி நீக்கம், மாற்றம், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை பற்றி விரிவாக  எழுதப்பட்டவை. 

7. விளைவு பட்ஜெட்: 2006-07 நிதியாண்டு முதல் ஒவ்வொரு அமைச்சகம் ஒதுக்கப்பட்ட நிதியில் செய்யப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்காக பணம் செலவிடப்பட்டதா என்பதையும் அளவிட இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 

8.  மூலதன பட்ஜெட்: மூலதன பட்ஜெட்டில் மூலதன ரசீதுகள் மற்றும் கொடுக்கபடவேண்டியவை, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டியவைகள் இதில் அடங்கும். 9. வருவாய் பட்ஜெட்: வருவாய் பட்ஜெட்டில் அரசாங்கத்தில் வருவாய் ரசீதுகள் மற்றும் அதன் செலவுகள் உள்ளன. வருவாய் ரசீதுகள் வரி மற்றும் வரிஅல்லாத வருவாயாக பிரிக்கப்படுகின்றன. 

9. வருவாய் பட்ஜெட்:  வரி வருவாய் என்பது வருமான வரி, கார்ப்பரேட் வரி, கலால் சுங்க, சேவை வரிகள் போன்றவைகளாகும். வரி அல்லாத வருவாய்  ஆதாரங்களின் கடன்களுக்கான வட்டி, முதலீடுகளின் ஈவுத்தொகை ஆகியவை அடங்கும். 

10. Vote on account: இடைக்காலப் பட்ஜெட்டின் போது பாராளுமன்றத்தில் vote on account மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அடுத்த நிதி ஆண்டுக்குத் தேவையான நிதியைப் பெற பாராளுமன்றம் எளிதாக அனுமதியை வழங்கும்.

பொதுவாக தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் போது அல்லது வேறு சில காரணங்களுக்காக அரசால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாமல் போகும் போது கருவூலத்தில் உள்ள நிதியைச் செலவு செய்யும் அதிகாரத்தைப் பெற உதவும்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top