வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயரும் என தகவல்!!

இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருக்கும் பட்சத்தில் முழுமையான விரிவிலக்கு என அறிவிக்கப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயரும் என தகவல்!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முன்வைக்கவுள்ள முதல் பட்ஜெட் திட்டங்களில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. எனினும், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்புகள் உயர்த்தப்பட்டன. இதனால், நிச்சயம் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு என அறிவிக்கப்பட்டது.

மேலும், வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் கிடைக்கக்கூடிய வரிவிதிப்பு வருமானத்திலிருந்து விலக்கு முதலில் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் மேலும் ரூ.50,000 உயர்த்தப்பட்டு, ரூ.2.5 லட்சமாக தனிநபர் வருமான விரிவிலக்கு உள்ளது.

இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், அவர்களின் கனவான, வீடு வாங்குவதற்கான திறனை அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்து அனைவரும் ஏமாற்றத்தையே சந்தித்து வந்துள்ளனர். இந்த 5 ஆண்டு காலத்தில் விலைவாசிகள் கடுமையான அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இன்னும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் என்பது ஏற்புடையதாக இல்லை என்பது மாதச்சம்பளதாரர்களின் ஆணித்தரமான கருத்தாக அமைந்துள்ளது.

இந்த ரூ.2½ லட்சம் என்பதை இரு மடங்காக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனாலும், ரூ.2½ லட்சம் என்பது ரூ.3 லட்சம் என்ற அளவிலாவது உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருமான வரி சட்டம் பிரிவு 80–சியின் கீழ் அளிக்கப்படுகிற வரி விலக்கு வரம்பு ரூ.1½ லட்சமாக உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை செய்கிறபோது தனிநபர் சேமிப்பு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கிறபோது அதை வளர்ச்சித்திட்டங்களுக்கு முதலீடாக பயன்படுத்த வழி பிறக்கும்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top