பி.எஸ்.என்.எல் நிலுவையை வசூலிப்பதில் தீவிரம்: 3 மாதத்தில் ரூ. 3,000 கோடி

தன்னார்வ ஓய்வூதியத் திட்டம், சொத்தினை நிர்வகித்தல் மற்றும் 4ஜி ஸ்பெட்க்ட்ரம் ஒதுக்கீடு போன்று கூறுகளை உள்ளடக்கிய புத்துயிர் தொகுப்பினை பி.எஸ்.என்.எல் தயாரித்து வருகிறது.

பி.எஸ்.என்.எல் நிலுவையை வசூலிப்பதில் தீவிரம்:  3 மாதத்தில் ரூ. 3,000 கோடி

மாத வருவாய் மற்றும் செலவீனங்களுக்கு இடையில் ரூ. 800 கோடி வரை வேறுபாடு உள்ளது.

New Delhi:

அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை தாமதமாக வழங்கியுள்ளது. 

இந்நிலையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிலுவையில் உள்ள ரூ. 3,000 கோடியை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 அன்று ஜுலை மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்கியது. 

“எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 3000கோடிக்கு மேல் நிலுவைகள் உள்ளன. நாங்கள் அவர்களை தொடர்ந்து அன்றாட அடிப்படையில் பின் தொடந்து நிலுவையை செலுத்த வலியுறுத்துவதாக பி.எஸ்.என்.எல் தலைவரும் நிர்வாக இயக்குநரும் பி.கே.பார்வார் செய்தி நிறுவனமான பிடிஐ க்கு தெரிவித்தார்.

முழு தொகையையும் மீட்டெடுப்பதற்கு ஒரு திட்டவட்டமான காலக்கெடுவை வழங்குவது கடினம் என்றாலும்  மூன்று மாதங்களில் நிலுவையை மீட்டெடுக்க நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வளாகத்தை பல்வேறு இடங்களை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் வருவாயைக் அதிகரித்து வருகிறது. வாடகை வருமானத்திற்கான இலக்கு சுமார் ரூ. 1,000 கோடி வரை வருவாயை பெற திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்  தற்போதுள்ள கட்டிடங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் அதிக இடத்தை குத்தகைக்கு விடவும் திட்டமிட்டுள்ளது. 

மாத வருவாய் மற்றும் செலவீனங்களுக்கு இடையில் ரூ. 800 கோடி  வரை வேறுபாடு உள்ளது. 

தன்னார்வ ஓய்வூதியத் திட்டம், சொத்தினை நிர்வகித்தல் மற்றும் 4ஜி ஸ்பெட்க்ட்ரம் ஒதுக்கீடு போன்று கூறுகளை உள்ளடக்கிய புத்துயிர் தொகுப்பினை பி.எஸ்.என்.எல் தயாரித்து வருகிறது.

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களை புதுப்பிப்பிதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை இணைப்பதற்கான ஒரு திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

பி.எஸ்.என்.எல் நஷ்டம் சுமார் ரூ. 14,000 கோடி வருவாய் குறைந்தது. 2018-19இல் ரூ. 19,308 கோடி , 2016-17இல் இதன் நஷ்டம் ரூ. 4,793 கோடியாக இருந்தது. 

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் எண்ணிக்கை 1,65,179 ஆகவும் மொத்த பணியாளர் செலவு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 75 சதவீதமாகவும் உள்ளது. இதற்கு மாறாக, தனியார் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 3-5.5 சதவீதம் வரை மிகக் குறைந்த பணியாளர் செலவைக் கொண்டுள்ளன. 

ஹைலைட்ஸ்

  • பி.எஸ்.என்.எல் கடனை வசூலிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
  • நிதிநெருக்கடியில் கடுமையாக சிக்கியுள்ளது.
  • இரண்டாம் முறையாக ஊழியர்களின் சம்பளத்தை தாமதமாக கொடுத்துள்ளது
More News