சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தன: சரிவிலிருந்து மீள திணறும் நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையில் 731 பங்குகள் முன்னேறியும் 893 பங்குகள் சரிந்தும் 488நிறுவனப் பங்குகள் தட்டையாக இருந்தன.

சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தன: சரிவிலிருந்து மீள திணறும் நிஃப்டி

நாட்டின் 12 பெரிய கடன் வழங்கு வங்கிகளின் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 2.07 சதவீதமாக சரிந்தது

உலக சந்தைகளின் பலவீனத்தின் மத்தியில் வங்கிப் பங்குகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 199.09 புள்ளிகள் சரிந்து 37,978.86 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 59.9 புள்ளிகள் குறைந்து 11,253.40 ஆக இருந்தது. 

வங்கி மற்றும் நிதிச் சேவை பங்குகளின் இழப்புகள் சந்தையின் இழப்பை அதிகரித்தன. தகவல் தொழில்நுட்பம். எரிசக்தி, உள்கட்டமைப்பு பங்குகள் ஆகியவற்றின் லாபம் வீழ்ச்சியை சற்று குறைத்தது. முக்கிய கார்ப்பரேட் வருவாய் அறிக்கைகள் மற்றும் பொருளாதார தரவுகளை ஆய்வாளர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். 

காலை 10.35 மணிக்கு சென்செக்ஸ் 136.47 புள்ளிகள் குறைந்து 38,041.48 ஆக இருந்தன. நிஃப்டி 38.70 புள்ளிகள் குறைந்து  11,274.60 ஆக இருந்தது.  

அந்த நேரத்தில் நிஃப்டி குறியீட்டில் யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், கெயில், ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ ஆகியவை 2.22 சதவீதம் 3.47 சதவீதத்திற்கும் குறைவாக வர்த்தக செய்தன. 

மும்பை பங்குச் சந்தையில் 825 பங்குகள் அதிகமாக வர்த்தகம் செய்தன. 953 நிறுவனப் பங்குகள் சரிந்தன. 107 நிறுவனப் பங்குகள் மாறாமல் இருந்தன. 

தேசிய பங்குச் சந்தையில் 731 பங்குகள் முன்னேறியும் 893 பங்குகள் சரிந்தும் 488நிறுவனப் பங்குகள் தட்டையாக இருந்தன. 

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டாக் வங்கி சென்செக்ஸில் அதிக வீழ்ச்சியை சந்தித்தன. 

நாட்டின் 12 பெரிய கடன் வழங்கு வங்கிகளின் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 2.07 சதவீதமாக சரிந்தது. 

யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ ஆகியவற்றின் பங்குகள் முறையே 6.94 சதவீதமும் 2.66 சதவீதமும் 2.85 சதவீதமும் சரிந்தன.

ஐடி பங்குகள் சற்று லாபத்தை பெற்றன. டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 0.91 சதவீதம் உயர்ந்தது.