10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது 24 மருந்துகள் மீதான தட நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவப் பொருட்கள் தொடர்பான பங்குகள் ஏற்றத்தை சந்தித்துள்ளன. 

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!!

இந்திய ரூபாயின் மதிப்பும் 49 காசுகள் அதிகரித்து ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 75.64-ஆக உள்ளது.

ஹைலைட்ஸ்

  • 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை உச்சத்தை தொட்டுள்ளது.
  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 49 காசுகள் அதிகரித்துள்ளது
  • சென்செக்ஸ் 2,566.7 புள்ளிகள் உயர்ந்து 30,067.21 ஆக நிறைவுபெற்றது

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தை அடைந்தன. கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களாக சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அதிரடி உயர்வு பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,566.7 புள்ளிகள் அதாவது 9 சதவீதம் உயர்ந்து 30,067.21 புள்ளியாக நிறைவு பெற்றது. இது கடந்த 2009 மே-யில் இருந்து ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் உயர்வு ஆகும்.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டியின் புள்ளிகள் 708.40 அதிகரித்து 8,792.20 ஆக நிறைவு பெற்றது. 

வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஃபார்மா, ஆட்டோ மொபைல்ஸ் பங்குகள்தான் பங்குச்சந்தை ஏற்றத்திற்கு முக்கிய காரணம். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது 24 மருந்துகள் மீதான தட நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவப் பொருட்கள் தொடர்பான பங்குகள் ஏற்றத்தை சந்தித்துள்ளன. 

இதேபோன்று ஆசிய பங்குச்சந்தைகளான ஹேங்செங், நிக்கே, ஸ்ரைட்ஸ் மைம்ஸ், தைவான், செட் ஆகியவையும் 2 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. 

ஐரோப்பிய பங்குச் சந்தைகளான சி.ஏ.சி., எஃப்.டி.எஸ்.இ., டேக்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 4 சதவீதம் வரைஉயர்ந்துள்ளன.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. ஊரடங்கு முடிந்தபின்னர் பங்குச்சந்தையில் சீரான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 10-ம்தேதி புனிதவெள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பங்குச்சந்தை நடைபெறும். 

இந்திய ரூபாயின் மதிப்பும் 49 காசுகள் அதிகரித்து ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 75.64-ஆக உள்ளது. Dr.ரெட்டி, சிப்லா, இண்டஸ் இன்ட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிட்., உள்ளிட்டவற்றின் பங்குகள் அதிக ஏற்றத்தில் சென்றன.

Listen to the latest songs, only on JioSaavn.com