இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நமது பொருளாதாரத்தை கோவிட்-19 பொருளாதார மீட்பு குழு ஒன்றை அமைத்து பிரதமர் மோடி மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்!!

ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், உலோகம் மற்றும் மருந்துப் பங்குகள் ஆகியவற்றின் லாபங்கள் சந்தைகளை ஆதரிக்கிறது.

ஹைலைட்ஸ்

  • பொருளாதார மீட்பு குழுவை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு
  • பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 172.59 புள்ளிகள் அதிகரிப்பு
  • மருந்துப் பங்குகள் ஆகியவற்றின் லாபங்கள் சந்தைகளை ஆதரிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பொருளாதார மீட்பு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய உள்நாட்டு பங்குச்சந்தைகள் சாதகமான வகையில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 172.59 புள்ளிகள் அதிகரித்து 28,460.82 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 பெஞ்ச்மார்க் 8,284.45 ஆகவும் தொடங்கியது, முந்தைய முடிவிலிருந்து 21 புள்ளிகள் அதிகரித்துள்ளது. வணிகத்தில் அதன் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதாக அறிவிக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எடைபோடுகின்றனர்.

காலை 9.25 மணிக்கு, சென்செக்ஸ் 392.93 புள்ளிகள் - அல்லது 1.39 சதவீத அளவில் வர்த்தகத்தை தொடங்கி 28,681.16 ஆக உயர்ந்தது, நிஃப்டி 125.00 புள்ளிகள் அல்லது 1.51 சதவீதம் உயர்ந்து 8,388.45 புள்ளிகளில் வர்த்தகம் செய்தது.

50 பங்குகளின் நிஃப்டியில் நாற்பத்தி நான்கு பங்குகள் சாதகமாக வர்த்தகம் ஆனது. கெயில், ஐ.டி.சி, பவர் கிரிட், ஓ.என்.ஜி.சி, சன் பார்மா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை 3.59 சதவீதம் முதல் 7.20 சதவீதம் வரை வர்த்தகம் ஆனது.

மறுபுறம், எச்.டி.எஃப்.சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவை முறையே 4.59 சதவீதம், 4.14 சதவீதம் மற்றும் 1.20 சதவீதம் குறைந்து நிஃப்டி இழப்புக்களில் முதலிடத்தில் உள்ளன.

முன்னதாக கொரோனா தாக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார். அதில், கொரோனா வைரஸ் நமது பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய அரசும், ‘கோவிட்-19 பொருளாதார மீட்பு குழு'வை அமைக்க முடிவு செய்துள்ளனர். இக்குழு அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளை கேட்டு, பொருளாதார பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கும், என்றார். 

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு' உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

முன்னதாக வியாழக்கிழமை, சந்தை கட்டுப்பாட்டாளர் செபி நிறுவனங்களுக்கு 2019-20 நிதியாண்டிற்கான வருவாயைத் தாக்கல் செய்ய ஒரு மாத கால நீட்டிப்பை அறிவித்தார்.

Listen to the latest songs, only on JioSaavn.com