This Article is From Feb 28, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சறுக்கிய உலக சந்தைகள் - 1,150 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியனை சந்தித்தன. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சறுக்கிய உலக சந்தைகள் - 1,150 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

கொரோனா வைரஸ், சீனாவுக்கு உள்ளேயே கட்டுக்குள் வைக்கப்படும் என்று முன்னர் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக அதன் தாக்கம் சீனாவையும் தாண்டி அதிகரித்து வருகிறது. 

உலகத்தின் பல பகுதிகளில் கொரொனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதனால், பல சர்வதேச சந்தைகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச் சந்தையான நிஃப்டி வீழ்ச்சியடைந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 1,155.16 புள்ளிகள் சரிந்து, 38,590.50 என்ற நிலையில் இருக்கிறது. நிஃப்டி, 346.8 புள்ளிகள் சரிந்து, 11,286.50 என்ற ரீதியில் உள்ளது. குறிப்பாக வங்கித் துறை, வாகனத் துறை, உலோகம் மற்றும் எண்ணெய் & எரிவாயுத் துறைகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இது குறித்த முக்கிய 10 தகவல்கள்:

1.இன்று காலை 9:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ், 986.21 புள்ளிகள் அல்லது 2.48 சதவிகிதம் சரிந்து 38,759.45 என்ற ரீதியில் இருந்தது. நிஃப்டி, 306.15 புள்ளிகள் அல்லது 2.63 சதவிகிதம் சரிந்து, 11,327.15 புள்ளிகள் என்ற ரீதியில் இருந்தது. 

2.இன்றைய சந்தையில் டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், வேதாந்தா, டெக் மகிந்திரா, பஜாஜ் பினான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 3.84 முதல் 6.23 சதவிகிதம் வரை சரிந்தது. 

3.அதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கூட்டாக 300 புள்ளிகள் வீழ்ந்தன. 

4.2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், உலக சந்தையில் பெரும் ஸ்திரமற்றத் தன்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தில் இருப்பதனால், முதலீடுகளை கைவிட்டு வருகின்றனர். 

5.கொரோனா வைரஸ், சீனாவுக்கு உள்ளேயே கட்டுக்குள் வைக்கப்படும் என்று முன்னர் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக அதன் தாக்கம் சீனாவையும் தாண்டி அதிகரித்து வருகிறது. 

6.ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியனை சந்தித்தன. 

7.கொரோனா வைரஸ் பாதிப்பை உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது. 

8.தற்போது இந்தியாவில் உள்ள பொருளாதார வல்லுநர்கள், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி தரவுகளை எதிர்நோக்கிக் காத்துள்ளனர். 

9.பல பொருளாதார வல்லுநர்கள், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்தனர். ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஜிடிபி வளர்ச்சி 4.7 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் பலர் தற்போது தெரிவிக்கின்றனர். இதற்கு முந்தைய காலாண்டில் ஜிடிபி, 4.5 சதவிகிதம் வளர்ந்தது. 

10.வியாழக் கிழமையான நேற்று சென்செக்ஸ், 143.30 புள்ளிகள் அல்லது 0.36 சதவிகிதம் சரிந்து 39,745.66 புள்ளிகளில் நிலை கொண்டது. அதேபோல நிஃப்டி, 45.20 புள்ளிகள் அல்லது 0.39 சதவிகிதம் சரிந்து, 11,633.30 புள்ளிகளில் நிலை பெற்றது.