சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

நிஃப்டியில் இந்தியன் ஆயில், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, யூபிஎல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் வர்த்தகம் 2.96 சதவீதம் முதல் 5.26 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டாக் வங்கி ஆகியவை சென்செக்ஸில் ஆதாயத்தில் முதலிடத்தை பெற்றன.

இன்று இந்திய பங்குச் சந்தை உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 564.55 புள்ளிகள் அதிகரித்து 39,158.07 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 170.65 புள்ளிகள் உயர்ந்து 11,610.85 ஆக உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பங்குகளைத் தவிர்த்து பெரும்பாலான துறைகளில் கிடைத்த லாபம் சந்தைகளை உயர்த்தியது. 

இன்றைய பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் இதோ: 

காலை 10:21 மணிக்கு சென்செக்ஸ் 460.78 புள்ளிகள் அதிகரித்து 39,054.30 புள்ளிகளில் இருந்தன. நிஃப்டி 130.80 புள்ளிகள் அதிகரித்து 11,571.00ஆக இருந்தது. 

நிஃப்டியில் இந்தியன் ஆயில், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, யூபிஎல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் வர்த்தகம் 2.96 சதவீதம் முதல் 5.26 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. 

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டாக் வங்கி ஆகியவை சென்செக்ஸில் ஆதாயத்தில் முதலிடத்தை பெற்றன.

 கச்சா எண்ணெய் விலை இரவில் 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்ததையடுத்து  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்தன.

சர்வதேச சந்தையில் அமெரிக்கா கச்சா இருப்புகள் உயர்ந்ததும். சவூதி அரேபியா அதன் எண்ணெய் உற்பத்தியை எதிர்பார்த்ததை விட வேகமாக மீட்டெடுத்ததும் கச்சா எண்ணெய் விலை இரண்டாவது நாளாக சரிந்தது. 

அமெரிக்க டாலர்ருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 70.99ஆக தொடங்கி ரூ. 70.90   மதிப்பு உயர்ந்தது. 

ஜப்பானுக்கு வெளியே எம்.எஸ்.சி.ஐயின் ஆசிய பசிபிக் -பங்குகளின் குறியீடு 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் 0.45 சதவீதம் உயர்ந்தது. 

ஹைலைட்ஸ்

  • நிஃப்டியில் இந்தியன் ஆயில், ஐசிஐசிஐ, கோட்டாக் முதலிடத்தில் உள்ளன.
  • ஐடி பங்குகள் தவிர மற்றவை உயர்ந்துள்ளன.
  • இந்தியன் ஆயில் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்தன
More News