கொரோனா பீதி: சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் சரிந்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாகக் கருதப்படுகிறது.

29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவு

ஹைலைட்ஸ்

  • Sensex hits lowest intraday level recorded since February 2019
  • Selloff across sectors drags markets tracking weakness in global markets
  • Analysts say more correction cannot be ruled out amid virus fears

உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வர்த்தகம் மந்தமடைந்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் துவக்கின. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,718.81 புள்ளிகள் சரிந்து, 35,857.81 ஆக வர்த்தகம் ஆனது. நிப்டியும் 464 புள்ளிகள் குறைந்து 10,525.45 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த அச்ச உணர்வு காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பங்குகளில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர். 

காலை 10.36 நிலவரப்படி, சென்செக்ஸ் 1,504.58 புள்ளிகள் அல்லது 4.00 சதவீதம் குறைந்து 36.072 ஆக வர்த்தகம் ஆன நிலையில், நிப்டி 417.35 புள்ளிகள் அல்லது 3.60ஆக குறைந்து 10,572ஆக வர்த்தகம் ஆனது. 

நிஃப்டியில் உள்ள 50 பங்குகளில் 46 பங்குகள் அந்த நேரத்தில் இழப்புகளுக்கு எதிராகப் போராடி வந்தன. வேதாந்தா, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்டஸ் இன்ட் வங்கி பங்குகள் 5.96 முதல் 10.62 சதவீதம் வரை கடும் சரிவைச் சந்தித்தன.

மற்றொரு புறம், யெஸ் வங்கி மற்றும் பாரத் பெட்ரோலியம் பங்குகள் 18.27 சதவீதம் முதல் 10.79 சதவீதம் வரை உயர்ந்தன. 

ரிலையன்ஸ் இன்டஸ்டிரஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகியவை சென்செக்ஸில் முதலிடம் வகுத்தன. இவை ஒன்றாகக் குறியீட்டில் 700 புள்ளிகளுக்கு மேல் இழப்பு ஏற்படுத்தின. 

மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாகக் கருதப்படுகிறது. 

இதனிடையே 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவைக் கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.74.87 என்ற அளவில் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதிலிருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.\  இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது.

இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது.