Profit

இனி பில் கேட்ஸ், உலகின் 2வது பணக்காரர் அல்ல; யார்னு தெரிஞ்சுக்கோங்க!

பில் கேட்ஸ், தனது சொத்துகளை பொது நலனுக்காக செலவு செய்து வருகிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இனி பில் கேட்ஸ், உலகின் 2வது பணக்காரர் அல்ல; யார்னு தெரிஞ்சுக்கோங்க!

கேட்ஸ் அவரின் பில் & மெலிண்டா அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலர்களுக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


ஹைலைட்ஸ்

  1. பெர்னார்டு அர்னால்ட்தான், 2வது இடத்தைப் பிடித்துள்ளார்
  2. அர்னால்ட், எல்.வி.எம்.எச் நிறுவனத்தின் உரிமையாளர்
  3. அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஸோஸ்தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்

உலகின் அதிக சொத்து வைத்திருக்கும் பணக்காரர் என்ற பெருமையை பில் கேட்ஸ் பல்லாண்டு காலம் அனுபவித்து வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அவர், உலகின் 2வது பெரிய பணக்காரர் என்ற நிலையில் இருந்தார். தற்போது அவர் 3வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இதைச் சொல்வது ப்ளூம்பெர்க் பில்லியனயர்ஸ் இன்டெக்ஸ். 

அந்தப் பட்டியல்படி பிரான்ஸைச் சேர்ந்த செல்வந்தர் பெர்னார்டு அர்னால்ட் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 107.6 பில்லியன் டாலர்களாகும். இது பில் கேட்ஸின் சொத்து மதிப்பைவிட 200 மில்லியன் டாலர்கள் அதிகமாகும். 

அர்னால்டின் எல்.வி.எம்.எச் நிறுவனத்தின் பங்குகள், புதன்கிழமையன்று, 0.7 சதவிகிதம் அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டு மட்டும் தனது சொத்தில் 39 பில்லியன் டாலர்களைக் கூடுதலாக சேர்த்துள்ளார் அர்னால்ட். 500 பேர் கொண்ட ப்ளூம்பெர்க் பட்டியலில், ஒரு தனி நபர் பெற்ற அதிக சொத்து உயர்வு இது. 

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ், நம்பர் ஒன் பணக்காரர் என்ற நிலையை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார். பிரான்ஸைச் சேர்ந்த பல செல்வந்தர்கள், 500 பேர் கொண்ட பட்டியலில் இந்த முறை இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அர்னால்ட், சொகுசு பொருட்கள் தயாரிக்கும் எல்.வி.எம்.எச் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். அதேபோல கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்திலும் பெரும் பங்கை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 

பில் கேட்ஸ், தனது சொத்துகளை பொது நலனுக்காக செலவு செய்து வருகிறார். அவர் அப்படி செய்யாமல் இருந்தால், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையைத் தொடர்ந்து தக்க வைத்திருந்திருப்பார். கேட்ஸ் அவரின் பில் & மெலிண்டா அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலர்களுக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பானது, இந்த ஆண்டு கொஞ்சம் உயர்ந்து 125 பில்லியன் டாலர் என்ற நிலையில் இருக்கிறது. சமீபத்தில் தனது மனைவிநான மாகென்ஸி பெஸோஸை, ஜெப் விவகாரத்து செய்தார். இந்த விவகாரத்தையொட்டி ஜெப், தனது சொத்தைப் பிரித்து, மாக்கென்ஸியிடம் கொடுத்தார். அதற்குப் பிறகும் ஜெப், தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top