மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!!

ஊழியர் விரோத போக்கை மத்திய அரசு கடைபிடிப்பதாக ஊழியர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் வெங்கடாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!!

ஜனவரி மாதம் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

BENGALURU:

மத்திய அரசைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜனவரி மாதம் 8-ம்தேதி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முக்கிய வங்கி ஊழியர்கள் சங்கமான அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8-ம்தேதி மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், புதிய வேலை உருவாக்கம், பணிப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதை நிறுத்தக் கோரியும் தேசிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

இந்த அழைப்பை ஏற்று வங்கி ஊழியர்களின் முக்கிய சங்கங்களான AIBEA, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகியவை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும். 

Newsbeep

இதனை தவிர்த்து ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இன்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.