வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது

மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை 19ல் இருந்து 12 ஆகக் குறைக்கும் ஒருங்கிணைப்பு திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது

நான்கு தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 26 முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தன.

New Delhi:

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் வாக்குறுதிகள் குறித்து ஆய்வு செய்யவதாக நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உறுதியளித்ததைத் தொடர்ந்து  வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளனர். வங்கி அதிகாரிகளின் நான்கு தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 26 முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தன.

 “அனைத்து வங்கிகளின் அடையாளத்தையும் பாதுகாப்பது உட்பட 10 வங்கிகளின் இணைப்பால் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் ஒப்புக் கொண்டார். எங்கள் வேலை நிறுத்தத்தை மறுபரீசீலனை செய்யுமாறு எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.” என்று கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 

இதன் விளைவாக, சாதாரண வங்கி செயல்பாடு பாதிக்கப்படாது. அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய தேசிய வங்கி அலுவலர்கள் காங்கிரஸ் மற்றும் வங்கி அலுவலர்களின் தேசிய கூட்டமைப்பு, இந்திய வங்கிகள் சங்கம், எஸ்.பி.ஐ ஆகிய கூட்டமைப்புகள் இணைந்து  செப்டம்பர் 26, 27, 2019 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை 19ல் இருந்து 12 ஆகக் குறைக்கும் ஒருங்கிணைப்பு திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. 

More News