2018-19 நிதியாண்டில் வங்கி மோசடிகள் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது - ஆர்பிஐ அறிக்கை

மோசடி வழக்குகள் ரூ.1 லட்சம் குறைவான தொகை 0.1 சதவீதம் மட்டுமே என்று ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 நிதியாண்டில் வங்கி மோசடிகள் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது - ஆர்பிஐ அறிக்கை

நடந்த தேதிக்கும் அதைக் கண்டறிவதற்கும் இடையே 22 மாதங்கள் பின்னடைவு உள்ளதென ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • வங்கி மோசடி 74சதவீதமாக அதிகரித்துள்ளது. ரூ.71,543 கோடி ஆகும்
  • கடந்த ஆண்டு மோசடி ரூ. 41,167 கோடியென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அரசு சார் வங்கிகளில்தான் மோசடி அதிகமாக உள்ளது.

2018-19 நிதியாண்டில் வங்கி அமைப்பில் மோசடிகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2017-18இல் நிதி மோசடி ரூ. 41,167 கோடியாக இருந்ததாகவும். 2018-19 நிதியாண்டில் நிதி மோசடி ரூ.71,543 கோடியாக உள்ளதென அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோசடிகள் நடந்த தேதிக்கும் அதைக் கண்டறிவதற்கும் இடையே 22 மாதங்கள் பின்னடைவு உள்ளதென ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

“வங்கிக் குழுக்களில், வங்கி கடன் வழங்குவதில் மிகப் பெரிய அளவை அரசு வங்கிகளே கொண்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் பதிவான மோசடிகளில் பெரும்பகுதி அரசு வங்கிகளில் நடந்துள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் தனியார் துறை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளன” என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடன்கள் தொடர்பான மோடிகள் 2018-19 ஆம் ஆண்டு நடந்த மோசடியின் மொத்த தொகைகள் மிக அதிகம்..\ கடன் அட்டை/ இணைய வங்கி மற்றும் வைப்பு தொடர்பான மோசடிகள் 2018-19 ஆம் ஆண்டில் மோசடிகளின் மொத்த மதிப்பி 0.3 சதவீதம் மட்டுமே என்று ஆர்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது. 

72 ஏமாற்றும் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன. அதை தொடர்ந்து  மோசடி வழக்குகள் ரூ.1 லட்சம் குறைவான தொகை 0.1  சதவீதம் மட்டுமே என்று ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.