ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம்!!

இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் வாகனத்தின் விற்பனை 18.4 சதவீதம் சரிந்துள்ளது.

ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம்!!

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகன விற்பனை குறைந்துள்ளது.

New Delhi:

ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் துறையில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் வாகனத்தின் விற்பனை 18.4 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகன விற்பனை குறைந்துள்ளது. நாட்டில் ஆட்டோ மொபைலை பொருத்தளவில் நேர்முகம் மற்றும் மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேர் பலன் அடைகிறார்கள்.

விற்பனை குறைந்ததால் அவர்களில் 10 லட்சம்பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ராம் வெங்கட ரமணி கூறுகையில், ‘கார்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. இதே நிலைமை நீடித்தால் 10 லட்சம்பேராவது வேலை இழப்பார்கள்' என்றார்.

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது மற்றும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அரசின் நிலைப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனாலும் விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் உடனடியாக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறும் அவர்கள் ஜி.எஸ்.டி. வரியையும் ஆட்டோ மொபைல் துறையில் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com