Profit

எஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது

எஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் ரூ. 20 லட்சமாகவும் வட்டி விகிதம் 10.75 சதவீதமாகவும் திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது

கார் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதமான 8.70% ஐயும் அறிமுகம் செய்துள்ளது.


பொருளாதார மந்த நிலை காரணமாக கார் விற்பனை வெகுவாக சரிந்தது. இந்நிலையில் கார் விற்பனையை அதிகரிக்க எஸ்பிஐ கார் கடனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. 

விழாக்கால விற்பனை சலுகையாகவும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்பிஐ வங்கி இந்த முடிவினை எடுத்துள்ளது. 

அதன்படி கார் கடன் வழங்குவதற்கான பிராஸசிங் கட்டணத்தை நீக்கியிருப்பதோடு கார் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதமான 8.70% ஐயும் அறிமுகம் செய்துள்ளது. 

சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் காரின் விலையில் 90 சதவீதம் வரை கடனைப் பெறலாம்.

உள்நாட்டு பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 30.98 சதவீதம் சரிந்து என்று சொஸைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மந்தநிலையில் 3.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. 

எஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் ரூ. 20 லட்சமாகவும் வட்டி விகிதம 10.75 சதவீதமாகவும் திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியுள்ளது. 

சம்பள கணக்கு உள்ள வாடிக்கையாளர்கள் முன் ஒப்புதல் பெற்ற டிஜிட்டல் கடன்களை ரூ. 5 லட்சம் வரை யூனோ ஆப் மூலமாக 4 கிளிக்களில் பெறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்விக் கடன் ரூ. 50 லட்சம் முதல் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதாக இருந்தால் ரூ. 1.50 கோடி வரை 8.25 சதவீதம் வட்டி விகித முறையில் வழங்கப்படும். திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. 



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top