Profit

அசோக் லேலண்ட் பணி நிறுத்தம் : ஊழியர்களின் நிலை எப்படி இருக்கிறது...?

அசோக் லேலண்டின் ஒருங்கிணைந்த விற்பனை  ஆகஸ்ட் மாதத்தில் 50 சதவீதம் குறைந்து விட்டது. மொத்தம் 8,296 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
அசோக் லேலண்ட் பணி நிறுத்தம் : ஊழியர்களின் நிலை எப்படி இருக்கிறது...?
Chennai: 

டிரக் தயாரிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த மாதத்தில் 5 முதல் 18 நாட்கள் வரை தனது ஆலைகளை மூடியுள்ளது. உற்பத்தியை திடீரென நிறுத்தியதால் ஒப்பந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணூர் தொழில்ற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி முரளியின் மாத சம்பளம் ரூ. 13,000 ஆனால் அவருக்கு இந்த மாதம்  ரூ. 4,000 குறையும் என்றும் இந்த மாதம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீட்டு வாடகை மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார்.

இவரின் சம்பளத்தை நம்பி மட்டுமே இளம் மனைவியும் 10 மாத குழந்தையும் உள்ளனர். தற்போது மனைவியையும் குழந்தையையும் தன்னுடைய மாமியார் வீட்டில் சென்று விட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னை தொழிற்சாலையில் மட்டும் முரளி போன்ற சுமார் மூவாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். “வேலை இல்லையென்றால் சம்பளமும் இல்லை” என்ற அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.  சுரேஷ் வேலை நிரந்திர பெற்ற தொழிலாளியின்அவருக்கும் இந்த மாத சம்பளம் ரூ. 8,000க்கும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனம் தொழிலாளர்களுக்கு கொடுத்த வந்த சலுகைகளை நிறுத்த ஆலோசித்து வருகிறது. சுரேஷ் “நாங்கள் எங்கள் குழந்தைகளை திரைப்படங்களுக்கு அழைத்து செல்வதை குறைத்துள்ளோம். வீட்டில் இரண்டு பாக்கெட் பாலுக்கு பதிலாக ஒரு பாக்கெட் பால்  மட்டுமே வாங்குகிறோம். இரண்டு காய்கறி கூட்டு வைத்து சாப்பிட்ட இடத்தில் ஒரு காய்கறி கூட்டு மட்டுமே வைக்கிறோம். அசைவ உணவை வாரத்திற்கு ஒரு முறை என்று வைத்துள்ளோம். இந்த மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே வேலை உள்ளது.

அடுத்த மாதம் பற்றிய பயம் எங்களுக்கு ஏற்பட்டு விட்டது” என்று கூறுகிறார். இருப்பினும் தொழிலாளர்கள் அசோக் லேலண்ட் தொழிலாளர்களுக்கு சிறந்த இழப்பீடு வழங்க முடியும் என்று ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜெயராமன் மேலும் கூறுகையில் “நிறுவனம் கடந்த ஆண்டு ரூ. 1,983 கோடி லாபம் ஈட்டியது. எனவே நெருக்கடி என்ன இருக்கிறது.

நிர்வாகம் தனக்கான லாபத்தை தக்க வைத்து விட்டு தொழிலாளர்களை கசக்கி விடுகிறார்கள். அசோக் லேலண்டின் ஒருங்கிணைந்த விற்பனை  ஆகஸ்ட் மாதத்தில் 50 சதவீதம் குறைந்து விட்டது. மொத்தம் 8,296 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. 

ஆட்டோ மொபைல் தொழில் 28 சதவீத ஜிஎஸ்டியை குறைத்து கடன் முறைகளையும் எளிதாக்க வேண்டுமென ஆட்டோமொபைல் துறை எதிர்பார்க்கிறது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு முடிவை எடுக்கும்.  வாகனத்துறையில் பிற பரிந்துரைகளை நாங்கள் பரிசீலித்துள்ளோம்”  என்று தெரிவித்துள்ளார். 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top