Profit

கடனை செலுத்த முடியாமல் திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்

2017 வரை 7 பில்லியன் டாலர் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கடனை செலுத்த முடியாமல் திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்

கடந்த 12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து


அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவால் ஆகிறது.  இதனால்  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை விற்று அதன் மூலம் கடன்களை அடைக்க முயன்றது. ஆனால், மொத்த கடன் தீர்மான நடைமுறை எந்த முன்னேற்றத்தையும் அடையாததால் திவால் என அறிவித்துள்ளது. 

கடந்த 12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளது. 

 2017 வரை 7 பில்லியன் டாலர் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கியுள்ளது. கடனில் மிகவும் தத்தளித்து வந்த இந்த நிறுவனம் விலை உயர்வு மற்றும் ஜியோ இன்ஃபோகாம்மின் வருகைக்கு பின் இதன் நஷ்டம் அதிகமாகியுள்ளது. ஜியோ நிறுவனம் அனில் அம்பானியின்  மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியின் நிறுவனமாகும்.  



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top