திவாலான Reliance Communications நிறுனத்தின் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா!

Insolvency and Bankruptcy Code 2016 நடைமுறைக்குக் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இருக்கிறது.

திவாலான Reliance Communications நிறுனத்தின் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா!

ற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது சொத்துகளை விற்கும் தறுவாயில் உள்ளது. 

Mumbai:

கோடீஸ்வர தொழிலதிபரான அனில் அம்பானி (Anil Ambani), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Reliance Communications) நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது சொத்துகளை விற்கும் தறுவாயில் உள்ளது. 

அம்பானியைத் தவிர்த்து, சயா விரானி, ரைனா கரணி, மஞ்சாரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சர் ஆகியோரும், நிறுவனப் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 30,142 கோடி ரூபாய் வருவாய் இழந்துள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. 

Insolvency and Bankruptcy Code 2016 நடைமுறைக்குக் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல், அந்நிறுவனத்தின் வியாபாரம், சொத்துகள் நிர்வகித்தல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக நடைமுறைகள், தேசிய நிறுவனங்களுக்கான சட்ட தீர்ப்பாயம் நியமனம் செய்த அனிஷ் நிரஞ்சன் நானாவதியால் நடத்தப்பட்டு வருகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com