மார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு!

எண்ணெய் மற்றும் எரிவாயு, தாமிரம் மற்றும் இரும்புத் தாது வணிகத்தில் சொத்துக்கள் பலவீனமடைந்துள்ளதால் ரூ.17,132 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பி.எஸ்.இக்கு வேதாந்தா தெரிவிந்துள்ளது.

மார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு!

மார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு!

அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனம், சனிக்கிழமை 2020 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு, தாமிரம் மற்றும் இரும்புத் தாது வணிகத்தில் சொத்துக்கள் பலவீனமடைந்துள்ளதால் ரூ.17,132 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பி.எஸ்.இக்கு வேதாந்தா தெரிவிந்துள்ளது.

இதுதொடர்பாக வேதாந்தா தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் ஒரு அறிக்கையில் கூறியதாவது, "கொரோனா தொற்றுநோய் உலகத்தையும் எங்களையும் ஆண்டின் கடைசி காலாண்டில் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த கடினமான காலங்களில் உகந்த செயல்பாடுகளை உறுதி செய்யும் அதே வேளையில் எங்கள் சொத்துக்களையும் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு செயலூக்கமான அணுகுமுறையை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் ரூ.20,382 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.25,096 கோடியாக இருந்தது.

முதன்மையாக, கொரோனாவை அடுத்து பொருட்களின் விலை குறைந்து, அலுமினிய வணிகம் குறைந்ததன் காரணமாக 2020ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதன் வருவாயானது ரூ.19,513 கோடியாக இருந்தது, இது தொடர்ச்சியாக 8 சதவீதம் குறைந்துள்ளது. 

வேதாந்தாவின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 0.9 சதவீதம் அதிகரித்து ரூ.105 ஆக உயர்ந்து நிறைவுபெற்றது.