Amazon, Flipkart Sales: அடேங்கப்பா… இத்தனை கோடியா…! பண்டிகை கால விற்பனையை அள்ளியது

Amazon, Flipkart Sales: அமேசானின் மொத்த விற்பனை அளவு வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தது. அதன் தொகுதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.

Amazon, Flipkart Sales: அடேங்கப்பா… இத்தனை கோடியா…! பண்டிகை கால விற்பனையை அள்ளியது

Amazon, Flipkart Sales: அமேசான் நிறுவனம் 99.4 சதவீத பின்கோடுகளிலிருந்து ஆர்டர்களைப் பெற்றது

New Delhi:

இந்தியாவின்ஆன்லைன் வணிக அமைப்புகளான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை பண்டிகை கால சிறப்பு விற்பனை செய்யப்பட்டது. ஆறுநாட்களில் மொத்தம் 3 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ. 19,000 கோடி) விற்பனை மூலம் கிடைத்துள்ளன என்று புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

ஆறு நாள் விற்பனை நிகழ்வின் போது வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சந்தையில் 90 சதவீதம் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக பெங்களூருவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ரெட்ஸீர் கன்சல்டன்சி தெரிவித்துள்ளது. 

பண்டிகை கால விற்பனையின் வேகத்தைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் ஆன்லைன் விற்பனையில் 6 பில்லியன் டாலர் (ரூ. 39,000) வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“பொருளாதார மந்தநிலையிலும் 3 பில்லியன் டாலர் விற்பனையை காணும் போது ஆன்லைன் ஷாப்பிங்கில் நுகர்வோர் வாங்கும் திறன் மற்றும் விருப்பம் நேர்மறையாக இருப்பதைக் குறிக்கிறது” என்று ரெட்ஸீர் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் கூறினார்

பண்டிகை காலத்தில் விற்பனை காலத்தில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 20 சதவீதமாக இருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க பங்கு வந்துள்ளது. 

Newsbeep

அமேசானின் மொத்த விற்பனை அளவு வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தது. அதன் தொகுதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 

அமேசான் நிறுவனம் 99.4 சதவீத பின்கோடுகளிலிருந்து ஆர்டர்களைப் பெற்றதாகவும் 500க்கும் மேற்பட்ட நகரங்களைச் சேர்ந்த 65,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' விற்பனையின் முதல் பதிப்பின் ஐந்து நாட்களில் ஆர்டர்களைப் பெற்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஏறக்குறைய 15,000 விற்பனையாளர்கள் விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளனர்.

பிளிப்கார்ட்டின் “பிக் பில்லியன் டேஸ்” விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது. ஆறுநாட்களில் 70 பில்லியன் பார்வையாளர்கள் தளத்தை பார்வையிட்டுள்ளனர்.