அடேங்கப்பா… 2020 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் வருமானம் இதுதான் தெரியுமா…?

சுந்தர் பிச்சையின் தலைமைக்கு பின்பு கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட சேவை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு பல வகையிலும் பயன்பாட்டை எளிமையாக்கியது.

அடேங்கப்பா… 2020 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் வருமானம் இதுதான் தெரியுமா…?

சுந்தர் பிச்சை 2004இல் கூகிளில் சேர்ந்தார்.

ஹைலைட்ஸ்

  • Sundar Pichai's stock package is on top of a $2 million salary in 2020
  • $90 million of the package is tied to Alphabet performance
  • Google CEO Sundar Pichai was named CEO of Alphabet this month
San Francisco:

ஆல்பாபெட் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 2020 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானமாக (டேக் ஹோம்)  2 மில்லியன் டாலர் மற்றும் 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு தொகுப்பையும் பெறுவார். 

பங்குத் தொகுப்பிலிருந்து 90 மில்லியன் டாலர் ஆல்பாபெட்டின் செயல்திறனுடன் இணைக்கப்படும். இணையத்தின் மிகப்பெரிய சர்ச் இஞ்சினாக செயல்படும் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பெட்டின் நிறுவனர்கள் தங்களின் பதவிகளை கைவிட முடிவு செய்தனர். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலர் சுந்தர் பிச்சை அவர்களே ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக  செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

Sundar Pichai salary package, Sundar Pichai pay package, Sundar Pichai salary package 2019, Sundar Pichai pay 2019, Sundar Pichai pay package 2019, Google CEO salary package, Alphabet CEO salary package

பங்கு பரிவர்த்தனை ஆணையத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுந்தர் பிச்சை ஜனவரி 1 முதல் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் கணிசமான வருமான உயர்வை பெறத் தொடங்குவார் என்று மெர்க்குரி நியூஸ் அறிக்கை கூறியுள்ளது. 

சுந்தர் பிச்சை 120 மில்லியன் டாலர் மற்றும் 30 மில்லியன் டாலர் என்ற இரண்டு பங்கு மானியங்களை பெற்றார் என்றும் இது செயல்திறனுடன் இணைக்கப்படவில்லை என்றும் தொடர்ச்சியான வேலைவாய்ப்புக்கு உட்பட்டது என்று அறிக்கை தாக்கலில் மேற்கோளிட்டப்பட்டுள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான  லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் தங்களது தற்போதைய பதவிகளை கைவிட முடிவு செய்தனர். 

Sundar Pichai stock package news, Sundar Pichai stock award, Sundar Pichai stock bonus,  Sundar Pichai salary bonus, Sundar Pichai take home salary, Sundar Pichai pay bonus,

சுந்தர் பிச்சை 2004ல் கூகுளில் சேர்ந்தார். 2015இல் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியானார். 2017ல் ஆல்பாபெட் போர்டில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுந்தர் பிச்சையின்  தலைமைக்கு பின்பு கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட சேவை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு பல வகையிலும் பயன்பாட்டை எளிமையாக்கியது. 

சுந்தர் பிச்சை சென்னையில் படித்து வளர்ந்தவர். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர்.

Listen to the latest songs, only on JioSaavn.com