வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை ரீபண்ட் உடனடியாக விடுவிப்பு!!

மத்திய நிதித்துறை அமைச்சகம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையால் ரூ. 18,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை ரீபண்ட் உடனடியாக விடுவிப்பு!!

உடனடியாக ரீபண்ட் பணம் வழங்கப்படுவதால் 14 லட்சம் பேர் பலன் அடைவார்கள்.

ஹைலைட்ஸ்

  • ரீபண்ட் ரூ5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்
  • வருமான வரி செலுத்தும் 14 லட்சம் பேர் பலன் அடைவார்கள்
  • அரசுக்கு 18 ஆயிரம் கோடி வரையில் இழப்பு ஏற்படும்

வருமான வரி செலுத்துவோருக்கு ரீபண்ட் பணம், ரூ5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் வருமான வரி செலுத்தும் 14 லட்சம் பேர் பலன் அடைவார்கள் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. ரீபண்ட் பணம் வழங்குதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
 

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தனிநபர், வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்களின் நலனை கவனத்தில் கொண்டு, வருமான வரி செலுத்துவோருக்கு ரீபண்ட் பணம், ரூ5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதனால் 14 லட்சம்பேர் பலன் அடைவார்கள். 

இதேபோன்று ஜி.எஸ்.டி., கலால் ரீபண்டை வழங்கவும் தீர்மானித்துள்ளோம். இது சிறுகுறு உள்பட 1 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். இவ்வாறு வழங்கப்படவுள்ள தொகையின் மதிப்பு ரூ. 18 ஆயிரம் கோடி

இவ்வாறு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கொரோனாவால் ஏற்படும் இழப்பை சரி செய்ய மத்திய நிதித்துறை கடந்த மாதம் ரூ. 1.70 லட்சம் கோடி வரையில் ஒதுக்கியது. இந்த தொகை ஏழை மற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

கொரோனா ஒழிப்பில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வரையில் மெடிக்கல் இன்சூரன்ஸ் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,இன்று அனைத்து கட்சி தலைவர்கள் உடன், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. வரும் 11-ம்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின்னர் ஊரடங்கு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.