பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உள்துறை அமைச்சரவை இந்த நடவடிக்கை ஒப்புதல் அளித்துள்ளது.
லைசென்ஸ் கட்டணம், ஸ்பெக்ட்ரம் கட்டண் உள்ளிட்ட தவனைகளை மத்திய அரசு உடனடியாக செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக முக்கிய முடிவினை உள்துறை அமைச்சரவை எடுத்துள்ளது.
அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.47 லட்சம் கோடியை 2022 ஆம் ஆண்டு வரை செலுத்தலாம் என அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது, நிதி நெருக்கடி காரணமாக எந்தவொரு நிறுவனமும் முடங்கிவிடக்கூடாது என அரசு விரும்புவதாக நிறுவனங்களக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார். அதைத்தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திருத்தப்பட்ட அவகாசம் பெற, தாங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு வங்கி உத்தரவாதம் கோரியுள்ளார்.
முன்னதாக, தொலைபேசி அனுமதி பெற்ற நிறுவனங்கள் தங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் (ஏஜிஆர்) குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு அனுமதி (லைசென்ஸ்) கட்டணமாகவும், கூடுதலாக ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு) பயன்பாடு கட்டணமாகவும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, பாரதி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும், கடைசியாக இந்த நிலுவைத் தொகைகளை வழங்கும் போது பாரிய நிகர இழப்புகளை வெளியிட்டது.
இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்தன. சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய காரணத்தால் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
அதன்படி, இந்தியாவில் வேறு எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ஏற்படாத மிகப்பெரிய இழப்பை இந்நிறுவனங்கள் சந்தித்துள்ளன. வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.50,921 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.23,045 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.