புதிய சர்வதேச ரோமிங் பிளானை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் புதிதாக சர்வதேச ரோமிங் வாய்ஸ் பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, 196 ரூபாயில் இருந்து இந்த ரோமிங் பிளான் தொடங்குகிறது

புதிய சர்வதேச ரோமிங் பிளானை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் புதிதாக சர்வதேச ரோமிங் வாய்ஸ் பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபாரின் பாஸ் என்று அந்த பிளானுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 196 ரூபாயில் இருந்து இந்த ரோமிங் பிளான் தொடங்குகிறது. அமெரிக்கா, கனடா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இந்த ஃபாரின் பாஸ் பிளான் செல்லுபடியாகும்.

இந்த 20 நாடுகளும் மக்கள் அதிகம் செல்லும் நாடுகளாகவும், சுற்றுலா தளங்களாகவும் இருக்கின்றன. இதன் மூலம் வெளிநாடு செல்வோர் தங்கள் உறவுகளுடன் தொடர்பில் இருப்பதை இந்த பிளான் எளிமையாக்குவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

196 ரூபாய்க்கு 20 நிமிடங்கள், 296 ரூபாய்க்கு 40 நிமிடங்கள், 446 ரூபாய்க்கு 75 நிமிடங்கள். இந்த பிளான் மூலம், ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் லோக்கல் மற்றும் சர்வதேச கால்களை எந்த கட்டணமில்லாமல் அழைக்கவும், அழைப்புகளை ஏற்கவும் முடியும்.

Price pointRs 196Rs 296Rs 446
Minutes (Local Outgoing, Incoming, Outgoing Back to India)20 minutes40 minutes75 minutes
Validity7 days30 days90 days
(Source: Bharti Airtel)

இந்த பிளானை, முதல் நிறுவனமாக அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். இந்த பிளானை ஆக்டிவேட் செய்ய, வாடிக்கையாளர்கள் தங்கள் ப்ரீபெய்டு கணக்கை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளத்தில் இந்த பிளானை ஆக்டிவேட் செய்யலாம். கடைகளிலும் நேரடியாக ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த பிளான் நேபாளம், பங்களாதேஷ், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பஹ்ரேன், சீனா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஃபிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த பிளான் பொருந்தும்.

More News