கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியாவுக்கு 2100 கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கிறது அரசு

ஏர் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 27,000. முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் கடன் பெற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியாவுக்கு 2100 கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கிறது அரசு

இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு, மத்திய அரசு உத்தராவதக் கடனாக 2,100 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக, விமான போக்குவரத்து துறை செயலாளர் சாபே தெரிவித்துள்ளார்.

உத்தரவாதக் கடன் என்பது, ஒருவேளை கடனை திரும்ப செலுத்த முடியாவிட்டால், அதற்கு மற்றொருவரோ அல்லது அமைப்போ பொறுப்பேற்க வேண்டும் என்பதே. ஏர் இந்தியா நிறுவனம், 46,805 கோடி ரூபாய் வரை, நஷ்டத்தை சந்தித்துள்ளது.

முன்னதாக ஏர் இந்தியாவின் 76% பங்குகளை தனியாருக்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதற்கு எந்த தரப்பில் இருந்தும் ஆர்வம் காட்டப்படாததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. கடன் சுமை அதிகமாக இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக, மக்களின் வரிப்பணத்தை வைத்து தான் ஏர் இந்தியா விமான சேவை நடந்து வருகிறது.

அரசு இப்போது, ஏர் இந்தியாவுக்கு முதலீட்டு நிதி வழங்க முடிவு செய்துள்ளது. அதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளாது. 5,951 கோடி ரூபாய் நிதி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 27,000. முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் கடன் பெற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தினசரி செலவுகளுக்கு பயன்படுத்த உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.2017, மார்ச் 31-ம் தேதி கணக்கு படி 49,100 கோடி ரூபாய் கடன் சுமையுடன் இருக்கிறது ஏர் இந்தியா.

More News