விநியோகத்தை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள் - ஏர் இந்தியா வைத்த ரூ.4,500 கோடி கடன்

வியாழக்கிழமை பிற்பகல் கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம் மற்றும் மொஹாலி ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு ஜெட் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது.

விநியோகத்தை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள் -  ஏர் இந்தியா வைத்த ரூ.4,500 கோடி கடன்

ஏர் இந்தியாவின் கடன் மதிப்பு ரூ. 58,000 கோடியாகும்.

New Delhi:

ஏர் இந்தியா மூன்று அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தப்படாத எரிபொருளுக்கான தொகை ரூ. 4,500 கோடி நிலுவையாக வைத்துள்ளது. ஏறக்குறைய 7 மாதங்களாக நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால் சில்லறை விற்பனையாளர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் கட்டாயத்தில் உள்ளனர் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை வியாழக்கிழமை பிற்பகல் கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம் மற்றும் மொஹாலி ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு ஜெட் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது. 

“ஏர் இந்தியாவுக்கு 90நாள் கடன் காலம் உள்ளது. அதாவது அவர்கள்  இன்று எரிபொருள் வாங்கினால் நவம்பர் 21க்குள் எரிபொருளுக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் ஏர் இந்தியா பணம் செலுத்தவில்லை கடன் காலம் 200 நாட்களுக்கு மேல் போய்விட்டது” என்று அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மூன்று எரிபொருள் விற்பனையாளர்களுக்கான மொத்த செலுத்தப்படாத நிலுவைத் தொகை ரூ. 4,500 கோடியாகும்

“ஏர் இந்தியா ரூ. 60 கோடி செலுத்த முன்வந்தனர். இது அவர்கள் செலுத்த வேண்டிய கடலில் ஒரு துளி” என்று எரிபொருள் நிறுவன வர்த்தக அதிகாரி தெரிவித்தார்.

Newsbeep

எரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் ஒருவாரத்திற்கு முன் ஏர் இந்தியாவுக்கு நிலுவைத் தொகையை விரைவாக செலுத்த கோரி கடிதம் எழுதின. அது தோல்வியுற்றதால் எரிபொருள் மறுக்கப்பட்டது. 

ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் “ஏர் இந்தியாவினால் மிகப்பெரிய கடன் சுமைகளை கையாள முடியாது” என்று கூறியுள்ளது.

ஏர் இந்தியாவின் கடன் மதிப்பு ரூ. 58,000 கோடியாகும்.