Profit

உள்நாட்டு விமான பயணத்தின் டிக்கெட் விலையின் தொடக்கம் ரூ.1000: ஏர் இந்தியா கொடுக்கும் ஆஃபர்

ஏர் இந்தியா விமானம் ரூ.1000லிருந்து தொடங்கும் விமான பயண டிக்கெட்களுக்கான ஆஃபர்களை வழங்கியுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
உள்நாட்டு விமான பயணத்தின் டிக்கெட் விலையின் தொடக்கம் ரூ.1000: ஏர் இந்தியா கொடுக்கும் ஆஃபர்

விமானப் போக்குவரத்து சந்தையில் அதிக போட்டியினை எதிர்கொள்ள ஏர் இந்தியா விமானம் ஆஃபர்களை வழங்கியுள்ளது.


நாட்டின் விமானப் போக்குவரத்து சந்தையில் அதிக போட்டியினை எதிர்கொள்ள ஏர் இந்தியா விமானம் ரூ.1000லிருந்து தொடங்கும் விமான பயண டிக்கெட்களுக்கான ஆஃபர்களை வழங்கியுள்ளது.

இரவு நேர விமான பயணங்களை அதிகப்படுத்தும் வகையில் இந்த ஆஃபர்கள் இரவு நேர விமான பயணத்திற்கு மட்டுமே வழங்கியுள்ளது. ‘பீட் பீக் ஹவர் ரஷ்' என்ற நோக்கத்தில் இந்த ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நவம்பர் 30, 2018ல் பெங்களூ - அகமதாபாத், டெல்லி -கோவை, டெல்லி -கோவா ஆகிய வழிகளில் இரவில் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே இந்த ஆஃபரை கொடுத்துள்ளது. இந்த ஆஃபர் நவம்பர் 18 வரை மட்டுமே.
 

Flight NoDepartureTimeArrivalTime15 Days Advance Basic Fares
AI 589Bengaluru0030Ahmedabad0235Rs 1,000
AI 590Ahmedabad0305Bengaluru0525Rs 1,000
AI 547Delhi2115Coimbatore0030Rs 2,500
AI 548Coimbatore0100Delhi0400Rs 2,500
AI 883Delhi2200Goa0035Rs 3,000
AI 884Goa0115Delhi0340Rs 3,000

 

இதற்கிடையில் தனியார் விமான நிறுவனமான கோஏர் (GoAir) நிறுவனம் சிறப்பு விற்பனையாக ஆஃபர் விலையில் ரூ 1,313க்கு இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கான விமான பயண டிக்கெட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கோஏரின் ஆஃபர் நவம்பர் 18, 2018 வரை மட்டுமே.

2018-ன் காலண்டர் வருடக் கணக்கின் படி ஆண்டின் முதல் 9 மாதங்கள் 1,027.93 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமான போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 21% சதவீதம் அதிகமாகும்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top