கிருஷ்ணபட்டணம் ஆழ்கடல் துறைமுகத்தை வாங்குகிறது அதானி போர்ட்ஸ்

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தில் 75% அதானி போர்ட்ஸ் வாங்கும் என்று பங்குகள் பரிமாற்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணபட்டணம் ஆழ்கடல் துறைமுகத்தை வாங்குகிறது அதானி போர்ட்ஸ்

014ஆம் ஆண்டில் தம்ரா போர்ட் கோ நிறுவனத்தை ரூ.55 பில்லியன் (766 மில்லியன் டாலர்) நிறுவன மதிப்பில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதானி போர்ட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் 1.9 பில்லியன் டாலர் நிறுவன மதிப்பு கிழக்கு கடற்கரையில் உள்ள  துறைமுகத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இது சந்தைமுதலாக நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக 64 மில்லியன் மெட்ரிக் டன் திறனுடன் விரிவு படுத்துகிறது. 

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தில் 75%  அதானி போர்ட்ஸ் வாங்கும் என்று  பங்குகள் பரிமாற்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதானி போர்ட்ஸினை கோடீஸ்வரர் கெளதம் அதானி  கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தற்போதுள்ள கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தின் பங்குதாரர்களிடமிருந்து ரொக்கம் மற்றும் உள்வளங்களை கொடுத்தும் வாங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“ முதலீடு செய்யும் பணத்திற்கான திருப்பி செலுத்தும் காலம் சுமார் 4 ஆண்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்”  என்று அதானி துறைமுகத்தின் தலைமை நிதி அதிகாரியும் முதலீட்டு தலைவருமான தீபக் மகேஸ்வரி ஒரு குறிப்பில் தெரிவித்தார். கிருஷ்ணபட்டிணத்தில் பல வகையான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதற்கேற்ற வகையில் ஒட்டுமொத்தமாக விரிவுபடுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். 

1,200 அடி நீளமுள்ள பனாமக்ஸ் அளவிலான கப்பல்களை ஏற்றக்கூடிய ஆழமான  துறைமுகமாக கிருஷ்ணாபட்டணத்தை அதானி போர்ட்ஸ் வடிவமைக்கும். 400 மில்லியன் மெட்ரிக் டன் திறன்  மற்றும் வருவாய் வளர்ச்சியை புதுப்பிக்கு இலக்கை நெருங்க இந்த கட்டமைப்பு உதவும். 2007 ஆம் ஆண்டில் விற்கப்பட்ட பங்கின் விலை மார்ச் 31 முதல் முதல்முறையாக  குறைந்தது. 

அதானி இந்தியாவில் 10 துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் இயக்குகிறது. ஆண்டுக்கு 350 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளுகிறது என்று அதானி போர்ட்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவிக்கிறது. 2014ஆம் ஆண்டில் தம்ரா போர்ட் கோ நிறுவனத்தை ரூ.55 பில்லியன் (766 மில்லியன் டாலர்) நிறுவன மதிப்பில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com