அடுத்த பெரிய திட்டத்தை கைப்பற்றியது அதானி குழுமம்

அதானி நிறுவனம் 6 நகரங்களில் தனியாகவும், 5 நகரங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்தும் கேஸ் விற்பனையை செய்ய இருக்கிறது

அடுத்த பெரிய திட்டத்தை கைப்பற்றியது அதானி குழுமம்

வீட்டு சமையல் பயன்பாட்டுக்கும், வாகன இயக்கத்துக்கும் தேவையான எரிவாயுவை 11 நகரங்களுக்கு விற்பனை செய்ய அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதானி நிறுவனம் 6 நகரங்களில் தனியாகவும், 5 நகரங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்தும் கேஸ் விற்பனையை செய்ய இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்கு நகரங்களில் இயற்கை எரிவாயு மற்றும் பைப் மூலம் எரிவாயு அனுப்பும் சேவையையும் செய்ய உள்ளது.

டோரன்ட் கேஸ், பாரத் கேஸ் மற்றும் கெயில் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை 86 நகரங்களில் செய்வதற்கான, உரிமம் வழங்கும் ஏலத்தை ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

More News