ஜியோவில் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது அபுதாபி நிறுவனமான முபாதலா!

முபடாலாவின் அனுபவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளர்ச்சி பயணங்களை ஆதரிப்பதன் மூலம் பயனடைவோம் என எதிர்பார்க்கிறோம்’

ஜியோவில் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது அபுதாபி நிறுவனமான முபாதலா!

ஜியோவில் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது அபுதாபி நிறுவனமான முபாதலா!

அபுதாபி நிறுவனமான முபாதலா, 1.85 சதவிகித ஜியோவின் பங்குகளை வாங்குகிறது. ஆறு வாரங்களில் நடந்த ஒப்பந்தங்களில் இது ஆறாவது பெரிய டீல் ஆகும். கடந்த சில மாதங்களாக ஜியோ நிறுவனத்தில் உலகைன் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. 

அந்த வகையில், கடந்த ஆறு வாரங்களுக்குள், பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.87,655.35 கோடி முதலீட்டை ஈட்டியுள்ளது. முபடாலா முதலீட்டு நிறுவனம், ஜியோ பங்குகளில் ரூ. 4.91 கோடியையும், ஜியோ நிறுவனத்தில் ரூ.5.16 கோடியை முதலீடு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ, நாடு முழுவதும் 388 மில்லியன் சந்தாதாரர்களுடன் உயர்தர மற்றும் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது.

'அபுதாபியுடனான எனது நீண்டகால தொடர்பின் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கும் உலகளவில் இணைப்பதற்கும் முபடாலாவின் பணியினை தனிப்பட்ட முறையில் பார்த்துள்ளேன். முபடாலாவின் அனுபவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளர்ச்சி பயணங்களை ஆதரிப்பதன் மூலம் பயனடைவோம் என எதிர்பார்க்கிறோம்' என ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முபடாலா எலக்ட்ரானிக் சிப் உற்பத்தி நிறுவனமான குளோபல் பவுண்டரிஸை வைத்துள்ளது. ஏஎம்டி போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதுடன், பெட்ரோலியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, விவசாயம், சுகாதாரம், உலோகம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்து வருகிறது.