என்ஆர்ஐ-க்களுக்கு காத்திருப்பு காலம் இல்லாமல் உடனடியாக ஆதார்: நிர்மலா அறிவிப்பு

இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. என்.ஆர்.ஐ.க்கள் ஆதார் பெற தற்போது 180 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
  2. மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்துடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
  3. தரவுகளில் மக்கள்தொகை, பயோமெட்ரிக் மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் உள்ளன

2வது முறையாக மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் மோடி அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்தவகையில், இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில், மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

கட்டாய காத்திருப்பு காலம் இல்லாமல், அயல்நாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) ஆதார் அட்டைகளைப் பெறலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

என்.ஆர்.ஐ.க்கள் ஆதார் அட்டை பெற தற்போது 180 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஆதார் அட்டை வழங்க திட்டமிட்டுள்ளது.

மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்துடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். அந்த தரவுகளில் மக்கள்தொகை, பயோமெட்ரிக் மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் அடங்கியிருக்கும்.Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top