
தபாலில் வந்த ஆதார் அட்டைப் போலவே, ஆன்லைனில் டவுன்லோடு செய்யப்படும் ஆதாரும் செல்லுபடியாகும்.
ஹைலைட்ஸ்
- ஆதார் அட்டை ஆன்லைனில் பெறலாம்
- இந்த அட்டை செல்லுபடியாகும்
- தேவைப்பட்டால் லேமினேஷன் செய்து கொள்ளலாம்
ஆதார் என்பது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் கொண்ட ஒரு அடையா அட்டை ஆகும். இதனை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் வழங்குகிறது. இந்தியாவில் அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால், பெரும்பாலானோர் தபால் மூலம் வந்த ஆதார் அட்டை மட்டுமே செல்லுபடியாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆதாரைப் பொறுத்தவரையில் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுவும் தபால் மூலம் வந்த ஆதார் அட்டைப் போன்றே செல்லத்தக்கது. ஆதார் ஆணையமும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தியுள்ளது.
#AadhaarTutorials
— Aadhaar (@UIDAI) July 23, 2020
Watch the video https://t.co/yyq9dgmvEB to know how you can download your latest updated Aadhaar anytime anywhere. This downloaded Aadhaar is as valid as the Aadhaar letter received by post (Related circular: https://t.co/8vlJO3yt7f) pic.twitter.com/hwi1MdVutv
அந்த வகையில், ஆன்லைனல் ஆதார் அட்டையை பதிவிறக்குவது எப்படி என்பது குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
படி 1: முதலில் uidai.gov.in என்ற UIDAI இன் ஆதார் போர்ட்டலுக்குச் செல்லவும்.
படி 2: "Get Aadhar" என்ற பிரிவின் கீழ் "Download Aadhar" என்பதைக் க்ளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில், ஆதார் எண் (யுஐடி), பதிவு ஐடி (ஈஐடி) மற்றும் விர்ச்சுவல் ஐடி (விஐடி) ஆகியவற்றில் எது உங்களிடம் உள்ளதோ அதை உள்ளீடு செய்யவும்.

தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, "Send OTP" பொத்தானைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, UIDAI தரப்பிலிருந்து, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அல்லது ஒரு முறை கடவுக்குறியீட்டை அனுப்பப்படும்.
கீழ்காணும் படத்தின்படி, இந்த OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.

OTPஐ என்டர் செய்த பிறகு, "Verify and Download" என்பதைக் கிளிக் செய்யவும்.

எல்லா படிநிநலைகளும் முடிந்த பிறகு, டிஜிட்டல் ஆதார் அட்டை பிடிஎப் வடிவத்தில் (PDF Format) பதிவிறக்கம் செய்யப்படும்.
டிஜிட்டல் நகல் - அல்லது மின்-ஆதார் - கடவுச்சொல்லால் பாதுகாக்கப்படுகிறது, அதாவது ஆதார் அட்டையைப் பார்க்க வேண்டுமென்றால், பயனர் தங்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டை என்டர் செய்ய வேண்டும். இந்த கடவுச் சொல்லானது பயனரின் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களின் (ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளபடி) பெரிய எழுத்துக்களில் ஒன்றாகும், அதன்பிறகு பயனரின் பிறந்த ஆண்டு YYYY வடிவத்தில் இருக்கும்.
ஆதார் தொடர்பான சேவைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கு யுஐடிஏஐ அவ்வப்போது சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பதிவுகளை ஷேர் செய்து வருகிறது.