வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71% உயர்வு

2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு முடிவடைந்தது

வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71% உயர்வு

2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு முடிவடைந்தது. இந்த ஆண்டு, வருமான வரி தக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை கூடுதலாக 71% அதிகரித்து 5.42 கோடியாக பதிவாகியுள்ளது. தனி நபர் செய்த இ-ஃபில்லிங் அளவு 54% அதிகரித்தும் உள்ளது.

“இந்த அதிகரிப்பு வருமான வரி செலுத்த வேண்டும் என மக்கள் முன் வருவதை குறிக்கிறது. மேலும், பண மதிப்பிழப்பு, விழிப்புணர்வு ஆகியவை இதற்கு தூண்டுதலாகவும் இருந்துள்ளது” என நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு 5.42 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இது 3.17 கோடியாக இருந்தது. கடைசி நாளான ஆகஸ்ட் 31,2018 அன்று 34.95 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3.37 கோடி. இது கடந்த ஆண்டு 2.19 கோடியாக இருந்தது. இது 54% உயர்வு.

Listen to the latest songs, only on JioSaavn.com