Profit

RBI Governor: நாட்டில் 5 சதவிகித வளர்ச்சி; என்ன சொல்கிறார் ஆர்.பி.ஐ ஆளுநர்?

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின், கடைசி காலாண்டின் வளர்ச்சி வெறும் 5 சதவிகிதமே இருந்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
RBI Governor: நாட்டில் 5 சதவிகித வளர்ச்சி; என்ன சொல்கிறார் ஆர்.பி.ஐ ஆளுநர்?

இந்தியாதான் உலக அளவில் எண்ணெய் இறக்குமதியில் முன்றாம் இடம் வகிக்கிறது. 


Mumbai: 

சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

“இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். சவுதி பிரச்னை தொடர்ந்தால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கலாம். அது அதிக காலம் இருக்குமானால், நிதிப் பற்றாக்குறையும் கூட வாய்ப்புள்ளது” என்று சி.என்.பி.சி டிவி18 செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

சவுதியில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தரப்பு, ஈரான் அரசை குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் மூலம் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விலையும் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள ஈரான், “முழு நேர போருக்கு நாங்கள் தயார்” என்று பொங்கியுள்ளது. 

தற்போது நடந்துள்ள சம்பவத்தால் இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பு இருக்கும் எனப்படுகிறது. இந்தியாதான் உலக அளவில் எண்ணெய் இறக்குமதியில் முன்றாம் இடம் வகிக்கிறது. 

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின், கடைசி காலாண்டின் வளர்ச்சி வெறும் 5 சதவிகிதமே இருந்தது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா காணும் மிகப் பெரிய பொருளாதாரச் சுணக்கம் இது. 

இது குறித்து சக்திகாந்த தாஸ், “தற்போது வந்துள்ள தரவுகள் மோசமானவைதான். வெறும் 5 சதவிகிதம் என்பது அதிர்ச்சியளித்தது. ஏன் அப்படி நடந்தது என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போது எங்களின் முக்கிய குறிக்கோள் வளர்ச்சியைப் பற்றியதுதான். பண வீக்கம் 4 சதவிகிதத்தில் இருப்பதால் வளர்ச்சி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது” என்று விளக்கியுள்ளார். 
 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top