போலீஸ் காவலில் அம்ராபாலி குழுமத்தின் 3 இயக்குநர்கள்!

நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அம்ராபாலியின் ஆதரவாளர்கள் 3 பேர் 15 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்

போலீஸ் காவலில் அம்ராபாலி குழுமத்தின் 3 இயக்குநர்கள்!

இயக்குனர் 3 பேரும் அனுமதியின்றி தொலைபேசி மற்றும் செல்போனை பயன்படுத்த முடியாது

அம்ராபாலி குழுமத்தின் 3 இயக்குநர்களும் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்பணம் பெற்று கொண்டு 42,000 வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்காமல் இருந்த காரணத்திற்காக அம்ராபாலி குழுமத்தின் இயக்குநர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

4 வாரங்களில் பதிலளிக்க கூறி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அம்ராபாலி குழுமத்தினர் பதிலளிக்காமல் இருந்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் உள்ள அணில் குமார், சிவ் பிரியா, அஜெய் குமார் உள்ளிட்ட மூன்று பேரும் அனுமதியின்றி தொலைபேசி மற்றும் செல்போனை பயன்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

3 இயக்குநர்களும் நொய்டாவில் உள்ள பார்க் அசண்ட் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று காலையில், நொய்டா முழுவதும் பரவிக் கிடக்கும் அம்ராபாலி குழுமத்தின் ஒன்பது உடைமைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • 3 இயக்குநர்களும் நொய்டாவில் உள்ள பார்க் அசண்ட் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளன
  • அம்ராபாலி குழுமத்தின் ஒன்பது உடைமைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
  • அம்ராபாலி குழுமம் 42,000 வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்காமல் இருந்த
More News