மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% அதிகரிக்க மத்திய கேபினெட் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 1.1 கோடி அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
இதனால் மத்திய அரசுக்கு 6,1120.20 ரூபாய் செலவு அதிகரிக்கும். இந்த உயர்வு, 2018 ஜூலை 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. பிரதமர் தலைமையிலான கேபினெட் குழு இந்த முடிவை எடுத்தது.
விலைவாசி உயர்வை மனதில் வைத்து இந்த 2% உயர்வு என அரசு அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது வழங்கப்படும் 7% அகவிலைப்படியோடு கூடுதலாக இந்த 2% அகவிலைப்படி அமலுக்கு வருகிறது. இந்த உயர்வு 48.41 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 62.03 லட்சம் ஓய்வூதிய தாரர்களுக்கு பயனளிக்கும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைத்தது படி இந்த உயர்வை கொண்டு வரப்பட்டுள்ளது.